|
| கூடாதபடி - சேராதபடி - செய்த அம்மானது; கூடாதன - இனி மலச்சார்வு கூடா வகைகள். ஆடா - ஆடுதல் - திளைத்துத் தொழுதல் என்ற பொருளில் வந்தது. "கைதொழு தாடா வருவேன்"(தேவா - ஐயாறு - அரசுகள்);-(5) இறை - முன்கை; "எல்வளை யிறையூரும்மை"(கலி - 7); தலத்தின் அம்மை பெயர்க் குறிப்பு. கீறிய - தோல் உரித்த; குறையார் - குறைவுடன் வந்தடைந்த;- (6) நினைந்தே - நினைந்ததன் பயனாலே; நினைந்தே - ஒழிந்தோம் என்று கூட்டுக; பலவும் பயனுள்ளன - பதமுத்திகளும் - தேவபோகம் முதலியனவும் பயனாகக்கொண்ட செயல்கள்; பற்றும் - மலச் சார்புகளால் வருவன; கலவம் - தோகை; கலாபம் என்பர் வடவர்; இது ஆண்மயிலுக் குரியது என்றது குறிக்கப் பேடையோடு எனப் பேடைக்கு அடைமொழியின்றிக் கூறிய நயம் காண்க; நிலவும் - நீங்காது நிலைபெற இடங்கொண்டு வீற்றிருக்கும்;- (7) மாடார் - பொன் போன்ற; மாடு - பொன்; ஆர் - உவமவுருபு. கொன்றை - இறைவர் பக்கமும், தோடார் குழை - அம்மை கலந்த பக்கமும் குறித்தன; 4-வது பாட்டும் பார்க்க; "தோடுடையா னொருகாதிற் றூய குழை தாழ" (தேவா); கூடார் - பகைவர்; ஆடாரரவம் - ஆடும் தன்மையுடைய அரவு; அமர்வான் எமது இறைவன் என்க; எமது இறைவன் என்பது இசையெச்சம்;- (8) உய்யா வகை - தப்பாத வகையால்; கொய் - அரும்புகள்; காண்டல் - முனைத்தல்; அடர்த்தல்;- (9) அசைந்து - இளைத்து;- (10) குழு - கற்றையாகிய;- (11) கல்லார் - கற்களாலியன்ற; கொல் - "விழுநீர்"(1); ஏந்தி - ஏந்தியவரது; ஏந்தி - பெயர். |
| தலவிசேடம் :- திருக்குரங்கணின்முட்டம் - தொண்டைநாட்டில் 6-வது பதி. குரங்கும் (வாலி) அணிலும் முட்டமும் (காகம்) வழிபட்ட பரி என்பது தலப்பெயர்க் காரணம். வாலி பூசித்தமையால் சுவாமி வாலீசுவரர் எனப் பெயர்பெறுதல் காண்க. கோயிலைச் சுற்றியுள்ள பொய்கை காக்கை மூக்கினாற் கீறியுண்டாக்கிய காரணத்தாற் காக்கை மடு எனப் பெயர் வழங்குதல் காக்கை பூசித்ததைக் காட்டும் அறிகுறியாம்; இம்மூன்றினுருவங்களும் கோயில்வாயிலில் தீட்டித் தாபித்து வழிபடப்பட்டு வருகின்றன; பூசித்த பிராணிகளின் பெரால் அவ்வத் தலங்கள் வழங்கப்படுதலைச் சீகாளத்தி - திருவாளைக்கா முதலிய தலப் பெயர்களாலறிக. சுவாமி - வாலீசுவரர்; அம்மை - இறையார் வளையம்மை; அம்மை பெயர் பதிகம் 5-வது பாட்டிற் காண்க. |
| இது காஞ்சிபுரத்தினின்றும் தெற்கில் மட்சாலை வழி 6 நாழிகையளவில் அடையத்தக்கது. |
| வேறு |
2884 | நீடு காஞ்சி வாணரு நிலவு மெய்ம்மை யன்பரும் மாடு சண்பை வள்ளலார் வந்த ணைந்த வோகையாற் கூடு கின்ற வின்பநேர் குலவு வீதி கோலினார் காடு கொண்ட பூகம் வாழை காமர் தோர ணங்களால். | |
| (986) |
| (இ-ள்) நீடு...அன்பரும் - பெருமையால் நீடிய காஞ்சிபுர நகரத்தில் வாழும் மாந்தர்களும் மெய்ம்மைநெறியினிலைபெற்ற திருத் தொண்டர்களும்; மாடு....இன்பம் - நகரின் அணிமையில் சீகாழி வள்ளலாராகிய பிள்ளையார் வந்து அணைந்த மகிழ்ச்சியினாலே பொருந்திய இன்பம் காரணமாக; காடுகொண்ட....தோரணங்களால் - காடுபோலச் |