[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1253

2885. (வி-ரை) நிரைத்தல் - வரிசைபெறக் கட்டி; பலவகைக் கொடிகளையும் பல பக்கங்களிலும் வரிசைபெற அமைத்தல் இந்நாளிலும் வழங்கும் அணிவகையாவதும் காண்க.
வேதிகை - திண்ணை. வேதிகைப்புறம் - பந்தர் - வீதியில் திண்ணைகளும் அதன் புறம்பு பந்தரும் அமைவன. இத்திண்ணைகள் சுதை முதலியன இட்டு அணி செய்வனவும் நிறைகுடம் முதலிய மங்கலப் பொருள்களை நிரைபெற அமைக்க வுதவுவனவுமாம்.
மாலை மொய்த்த பந்தர் - பந்தர்களிலே பூமாலைகளை நிறையக் கட்டுதல் அணி வகை. கடிகொள் மாலை - வாசனைப் பூக்களாலாகிய மாலைகள்; மாலை மொய்த்தல் அணி வகையேயன்றி வாசனை செய்யவும் உதவும். இந்நாளில் காகிதம் துணி முதலியவற்றாலாகிய போலிமாலைகளை அணிந்து மகிழ்தல் அறிவுடையோர் எள்ளத் தக்கனவும் பயனில்லாதனவுமாகிய போலி வழக்கங்களென்க.
கந்தநீர்த் தசும்பு - வாசனைப் பண்டம் பெய்த நீர் நிறைத்த குடங்கள்; நிறைகுடங்கள். தசும்பு - குடம்.
மடிவில் பொன்விளக்கு எடுத்து - மடிவில் - கெடாத - அவியாத; பொன் - அழகு என்றலுமாம். எடுத்து - ஏந்தி; விளக்கேந்தி மாதர் வருதல் - மங்கலஞ்செய் வழக்குக்களுள் ஒன்று.
மாதர் மைந்தர் - நாயகி நாயகர்களாக இணைந்து.
படிவிளக்கும் அன்பர் - உலகில் அன்பு நெறியை விளக்கி மக்களை உய்விக்கும் அன்பர்கள்; திருத்தொண்டர்கள்.
ஈண்டுவார் - விம்மவே - போய் - வணங்கினார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. ஈண்டுவார் - முற்றெச்சம்.
பரந்த பண்பில் - அங்கங்கும் பரவி நிறைந்த தன்மையில்.

987

2886. (வி-ரை) மாதர் ஆடல் - எதிர்கொள்ளும் மங்கலங்களுள் ஒருவகை; தொண்டர் பாடல் - சைவத்துறையும், வேதகீத நாதம் - வேதநெறியும் கூடிய விளக்கம் காட்டியன.
கம்பலைத்து - மகிழ்ச்சி மிக்க ஆரவாரத்தின் ஒலிசெய்து. கம்பலை - முழக்கம். முன்கூறிய ஆடல்-பாடல்-கீதம் என்பவை பொருள் குறித்த ஒலிகளாதலின் வேறு பிரித்து முன்னர்க் கூறப்பட்டன.
மூதெயில் - பழநகராதல் குறிப்பு. நகரின் மதிற்புறம்பு வணங்குதல் எதிர் கொள்ளும் முறை.
முன் வணங்கினார் - முன் - திருக்கூட்டத்தின் முன்பு.

988

2887
ண்பை யாளு மன்னர்முன்பு தொண்டர் வந்து சார்தலும்
பண்பு நீடி யானமுன் பிழிந்தி றைஞ்சு பான்மைகண்
டெண்பெ ருக்கு மிக்கதொண்ட ரஞ்ச லித்தெ டுத்தசொன்
மண்ப ரக்க வீழ்ந்தெழுந்து வான முட்ட ஆர்த்தனர்.

989

(இ-ள்) சண்பையாளும்...சார்தலும் - சீகாழித் தலைவராகிய பிள்ளையார் திருமுன்பு அத்திருத்தொண்டர்கள் வந்து சார்ந்தபோது; பண்பு....கண்டு - அடிமைப் பண்பினால் மிக்கு முத்துச் சிவிகையினின்றும் பிள்ளையார் இறங்கி வணங்கும் தன்மையினைக் கண்டு; என்பெருக்கு....சொல்மண்பரக்க - எண்ணைப் பெருக்குகின்ற பெருந்