1254திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

தொண்டர்கள் தொழுது ஆர்த்துத் துதித்த அர ஒலி உலகிற் பரவ; வீழ்ந்தெழுந்து...ஆர்த்தனர் - நிலமுற விழுந்து எழுந்து வானமளாவ ஆரவாரித்தனர்.
(வி-ரை) சண்பை...சார்தலும் - முன் கூறியபடி வணங்கித் திருக்கூட்டத்தைக் கடந்து சீகாழித் தலைவரது சிவிகையின் முன்பு அத்திருத்தொண்டர் வந்தவுடனே; சார்தலும் - சார்பாவது பிள்ளையாரது திருவடி எனச் சார்தலும் என்பதும் குறிப்பு.
பண்பு நீடி - இழிந்து - இறைஞ்சு - பான்மை - பண்பு - அடிமைத் திறம்; தொண்டர் கூட்டமும் திருவேடமும் அரனெனவே கண்டு தொழற்பாலன என்ற அடிமைத் திறம்.
கண்டு - அத்திறத்தின்று ஒழுகிப் பிள்ளையார் காட்டக் கண்டு.
எண் பெருக்கும் - எண் - எண்ணம். பெருக்குதலாவது - இவ்வாறு அடிமைப் பண்பினில் உலகம் எண்ணி உய்யும் தன்மையினை வளரச் செய்தல்.
மிக்க - பெருமையினால் மிகுந்த; அளவிறந்த என்றலுமாம்.
தொண்டர் - பிள்ளையாருடன் வந்த திருக்கூட்டத்தவர்களும் எதிர்கொண்டு வந்து வணங்கிய காஞ்சிபுரத் தொண்டர்களும்.
அஞ்சலித்து எடுத்த சொல் - அடிமைத்திறத்தின் விளைவாகிய அன்பினைக் கண்டு தாம் வணங்கி முழக்கிய அரனாம முழக்காகிய ஒலி. சொல் - என்றார் அரனாமமே சொல்லத் தக்கதென்பது குறிக்க. "எல்லா மரனாமமே சூழ்க"(தேவா); மண் பரக்க - உலகிற் பரவ.
வானமுட்ட ஆர்த்தல் - ஆரவாரிப்பின் ஓசையும் அரவென்னும் சொல்லின் எழுந்த மிக்க ஒலியும் ஆகாயமளாவ; மண்பரக்க வீழ்ந்து - சொல்லொலி மண்ணவர் செவிப் புலங்களில் வீழ்ந்து என்றும், எழுந்து - மேல் விண்ணில் எழுந்து என்றும் உரைத்தலுமாம்.
நீட ஐயன்முன் - எழுந்த சொல் - என்பனவும் பாடங்கள்.

989

2888
சேணு யர்ந்த வாயினீடு சீர்கொள் சண்பை மன்னனார்
வாணி லாவு நீற்றணி விளங்கி டமனத்தினிற்
பூணு மன்பர் தம்முடன் புகுந்திடப்புற த்துளோர்
காணு மாசை யிற்குவித்த கைந்நி ரையெ டுத்தனர்.

990

(இ-ள்) நீடு சீர்கொள் சண்பை மன்னனார் - நீடிய சிறப்புடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார்; வாணிலாவு....புகுந்திட - ஒளிபொருந்திய திருநீற்றுக் கோலம் திருமேனியில் விளங்கிட மனத்துள்ளே சிவன்பாலன்பே பூணாகக் கொண்ட அடியவர்களுடனே; சேணுயர்ந்த வாயில் - வானளவுயர்ந்த நகரத்து மதிற்புற வாயினுள்ளே புகுந்திட - புகுந்தபோது; புறத்துள்ளோர்....எடுத்தனர் - இவ்வளவில் நகர்ப் புறத்தினின்றும் வந்து கூடிய மக்கள் பிள்ளையாரைக் காணும் ஆசையினாலே வரிகையாகக் கைகளைத் தலைமேற் கூப்பினர்.
(வி-ரை) சேணுயர்ந்த வாயில் - இது புறத் திருமதில் வாயில். கோயில் வாயில் பின் (2891) வருதல் காண்க; இம் மதிற்றிருவாயிலின் சிறப்பினை "ஆங்கு வள ரெயிலினுடன் விளங்கும் வாயி லப்பதியில் வாழ் பெரியோ ருள்ளம் போல, வோங்குநிலைத் தன்மையவாய்...தீங்குநெறி யடையாத தடையு மாகி...."(1165) என்று முன் எடுத்துக் கூறியதை நினைவுகூர்க; சேணுயர்ந்த என்ற குறிப்புமிது;