1256திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

இயலுமாறு - பிள்ளையாரது மென்மைக்கேற்குமாறு என்றும், அவ்வவர் திறத்துக் கியன்றவாறு என்றும் உரைக்கநின்றது.
பூவும் பொற்சுண்ணமும் கலந்து வீசுதல் மங்கலம் செய்யும் செயல்களுள் வருவன. "புரிந்த பூவொடு பொற்சுணங்கழுமி" (பெருங்கதை - 2 - 39 - 46).
இருமருங்கும் - தெருவின் இருபக்கங்களினின்றும்.

991

திருவேகம்ப வழிபாடு
2890
இன்ன வண்ண மியாவரு மின்ப மெய்த வெய்துவார்
பின்னு வார்ச டைமுடிப் பிரான்ம கிழ்ந்த கோயில்கள்
முன்னு றப்ப ணிந்துபோய் மொய்வ ரைத் திருமகள்
மன்னு பூச னைமகிழ்ந்த மன்னர் கோயின் முன்னினார்.

992

(இ-ள்) இன்னவண்ணம்....எய்துவார் - மேற்கூறியவாறு இப்படி எல்லாரும் இன்பம் அடையச் சேர்வாராகிய பிள்ளையார்; பின்னுவார்.... போய் - புரிந்த நீண்ட சடைமுடியினை உடைய இறைவர் மகிழ்ந்த பல கோயில்களைச் செல்லும் வழி இடையே முன்னாகப் பணிந்து சென்று; வரைத் திருமகள்...முன்னினார் - மலையரசன் திருமகளாராகிய உமையம்மையாரது நிலைபெற்ற பூசனையை என்றும் மகிழ்ந்து கொண்டு எழுந்தருளிய திருவேகம்பராகிய இறைவருடைய திருக்கோயிலின் முன் அணைந்தருளினர்.
(வி-ரை) இன்ன வண்ணம் - முன் ஆறு திருப்பாட்டுக்களிற் கூறியபடி (2884 - 2889); யாவரும் - காஞ்சிவாணரும் திருத்தொண்டர்களும்.
இன்பமெய்த - "வாழ்த்துவதும் வானவர்க டாம்வாழ்வான்"(திருவா) என்றபடி பிள்ளையாருக்கு மங்கலஞ் செய்து எதிர்கொண்ட சிறப்பினால் அவ்வவர்கள் தாங்களின்பமடைய.
எய்துவார் - எய்துவாராகிய பிள்ளையார்; எய்துவார் - போய் - முன்னினார் என்று கூட்டுக.
கோயில்கள் முன்னுறப் பணிந்து போய் - காஞ்சிமாநக ரெல்லையுள் எண்ணில்லாத (கோடி) சிவாலயங்கள் உள்ளன என்பது முன் உரைக்கப்பட்டது; "இறைவர் தாமகிழ்ந் தருளிய பதிகளெண் ணிறந்தவத் திருநக ரெல்லை"(1153) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. இங்குக் கூறிய கோயில்கள் நகரத் தென்மதிற்புறத்தினின்றும் உள்ளே ஏகம்பர் திருக்கோயிலை நோக்கி வரும் வழியினிடையே உள்ளவை; இவை கச்சபேசம் முதலாயின என்பது கருதப்படும்.
முன்னுறப் பணிந்து - போய் - திருவேகம்பத்தை நோக்கி வரும் பிள்ளையார் இடையிற் கண்ட இறைவரது கோயில்களையும் வணங்கிச் செல்லவேண்டியது முறையாதலின் அதன்படி முன்னாக அவற்றை இறைஞ்சி.
மொய்வரைத் திருமகள் மன்னுபூசனை மகிழ்ந்த - மலையரசன் மகளாராய் உமையம்மையார் போந்து வந்து காஞ்சி மாவடியில் இறைவரை நிலைபெறப் பூசித்து அறம் வளர்த்து வீற்றிருக்கும் வரலாறு முன் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் விரித்தவாறு காண்க (1127 - 1148); மொய்வரைத் திருமகள் - வரை - மலையரசனைக் குறித்தது; வரை அரசனை வரை என்றதுபசாரம். "பொருப்பில் வேந்தன்"(1131); மன்னு பூசனை - "மாறிலாதவிப் பூசனை யென்றுமன்ன வெம்பிரான்