[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1257

மகிழ்ந்துகொண் டருளி"(1146) என்று அம்மை வேண்ட இறைவர் "விரும்பு பூசனை மேவி வீற்றிருந்" தருளினார் (1147) என்றது காண்க.
முன்னினார் - முன்னாக - அணித்தாகச் - சென்றருளினார்.

992

2891
கம்ப வாணர் கோயில்வாயில் கண்டு கைகு வித்தெடுத்
தும்ப ரோங்கு கோபுரத்தின் முன்னி றைஞ்சி யுள்ளணைந்
தம்பொன் மாளி கைப்புறத்தி லன்ப ரோடு சூழவந்
திம்பர் ஞால முய்யவந்த பிள்ளை யாரி றைஞ்சுவார்;

993

வேறு

2892
செம்பொன்மலைக் கொடிதழுவக் குழைந்தருளுந் திருமேனிக்
கம்பரைவந் தெதிர்வணங்குங் கவுணியர்தங் காவலனார்
பம்புதுளிக் கண்ணருவி பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காத றள்ளநில மிசைத்தாழ்ந்தார்.

994

2893
லமுறையும் பணிந்தெழுந்து பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுக மளித்ததிரு மணிவாயான் "மறையா"னென்
றுலகுய்ய வெடுத்தருளி யுருகியவன் பென்புருக்க
நிலவுமிசை முதற்றாள நிரம்பியநீர் மையினிகழ,

995

2894
பாடினார்; பணிவுற்றார்; பரிவுறுமா னந்தக்கூத்
தாடினா ரகங்குழைந்தா; ரஞ்சலிதஞ் சென்னியின்மேற்
சூடினார்; மெய்ம்முகிழ்த்தார்; சூகரமு மன்னமுமாய்த்
தேடினா ரிருவருக்குந் தெரிவரியார் திருமகனார்;

996

2895
மருவியவே ழிசைபொழிய மனம்பொழியும் பேரன்பாற்
பெருகியகண் மழைபொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியவன் புள்ளலைப்ப வுமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் யுணர்வினொடும் பரவியே புறத்தணைந்தார்.

997

2891. (இ-ள்) கம்பவாணர்....எழுந்து - ஏகம்பவாணராகிய இறைவரது திருக்கோயில் வாயிலினைக் கண்டு கைகளைக் கூப்பித் தலையின்மேல் தூக்கி வணங்கி; உம்பர்...இறைஞ்சி - வானத்தின்மேல் ஓங்கும் திருக்கோபுரத்தின் முன்னே பணிந்து; உள் அணைந்து....வந்து - திருக்கோயிலினுள்ளே சேர்ந்து அழகிய பொன்மாளிகையின் புறச்சுற்றிலே அன்பர்களுடனே சூழ்ந்து வலம் வந்து; இம்பர்...இறைஞ்சுவார் - இந்நிலவுலகம் உய்யும்படி திருவவதரித்த பிள்ளையார் வணங்குவாராகி,

993

2892. (இ-ள்) செம்பொன்மலைக் கொடி...கவுணியனார் - செவ்விய பொன் மலையரசனுக்கு மகளாராகிய கொடிபோன்ற காமாட்சியம்மையார் தழுவியிடக் குழைந்து காட்டியருளிய திருமேனியினை உடைய திரு ஏகாம்பநாதரைத் திருமுன்பு வந்து எதிரே வணங்கும் கவுணியர் பெருமானாராகிய பிள்ளையார்; பம்பு....புளகம் வர - ததும்பும் துளிகளாகப் பெருகி அருவிபோலக் கண்ணீர் பாய்ந்தொழுகத் திருமேனியில் மயிர்ப்புளக முண்டாக; தம்பெருகு....தாழ்ந்தார் - தமது திருமனத்தினிறைந்து பெருகுகின்ற பெருவிருப்பம் உந்த நிலத்தின்மேல் வீழ்ந்து வணங்கியவராகி,

994