[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1261

I கச்சித் திருவேகம்பம்
திருச்சிற்றம்பலம்

பண் - இந்தளம் - 2-ம் திருமுறை

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணோடா ணாகிய பெம்மானை
யிறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

(1)

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையாற்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - கம்பைக் கரையேர்கொள் கச்சித் திருவேகம்பம் உடையானையல்ல துள்காதென துள்ளமே(1 - 5 - 3); அவனைச் சேராதா ரின்பமா யந்நெறி சேராரே.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) பெண்ணா டாணாகிய பெம்மான் - உமை தழுவிய திருமேனிக் குறிப்பு. "இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்" (தேவா); அல்ல துள்காது - எதிர்மறையாற் கூறினார் பிறரிடைச் செல்லாமை வற்புறுத்தற் பொருட்டு; 5-வது பாட்டும் பார்க்க. "கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம் பந்தன்"(குறிஞ்சி - அச்சிறுபாக்கம்); "கொன்றையா னடியலாற் பேணா"(திருத்தொண்டத் தொகை);- (2) கண்டனையே நச்சி - என்க; ஏகாரம் பிரிநிலை ;- (3) சேராதார் இன்பமாய் நெறி சேரார் - எதிர்மறை உறுதிப் பொருள் குறித்தது; "சேராதார் நன்னெறிக்கட் சேராதாரே" (தாண்டகம்);- (4) மின்தேய்க்கும் முகில்கள் - முகில்கள் ஒன்றோடொன்று கூடுதலால் மின் உளதாம் என்ற கலைஞானக் கருத்து; சென்று ஏய்க்கும் - ஏய்தல் - பொருந்துதல்;- (5) கடை - முன்கடை; மூன்றும் - மனம் வாக்குக் காயம்; கம்பை - ஆறு; இவ்வாற்றின் கரையில் அம்மை மாவின் மூலத்தில் தவஞ் செய்து இறைவர் வெளிப்பட்டருளினர் என்ற வரலாறு குறித்தது (1139 - 1140);- (6) தம் கெழுவாளோர் இமையார் - தம்மை வணங்குவோர் இமையவராகிய வானவர்கள். கெழுவுதல் - பற்றிக் கொள்ளுதல்; "வாய்தல் பற்றித், துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம்"(அரசு); உச்சி - உமையாள் வழுவாமே - உமையாள் தம் திருவடியில் முடிசாய்த்து வழுவாது வணங்க; உச்சி - கங்கை வழுவாமே - தம் உச்சியிற் கங்கை நீங்காது;- (7) மறைகள் வேதம் விரித்தொதுவார்கண்ணுளார் - மறைகளாகிய வேதங்களை ஓதுவார்களிடத் திருப்பவர்; கழலின் வெல்வார் - காலனை - நண்ணுவார் - காலினால் வெற்றி கொள்வாராகி இயமனிடம் வருபவர்; கழல் - காலணி மணிவடம்; வீரக்கழல்; "கள்ளவினை, வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்" (போற்றிப் பஃறொடை). ஆடுகின்ற அலங்காரம் - திருக்கூத்தின் அதிசயம்; அழகிய உள்ளுறை. கரிகாலன் - கரிய காலன். கரிகாலன் என்ற பெயருடைய அரசன்; கச்சி நகரங்கண்ட அரசனையும் குறிப்பாலுணர்த்தி அவன் அன்பிற்கிரங்கி வெளிப்பட்டு எய்துபவர் என்ற வரலாறு குறிப்பதாக உரைத்தலுமொன்று (1162 = பார்க்க. இப்பொருளில் கழலின் வெல்வார் -என்பதனைத் தனி முடிபாக வைத்து வினைப்பகையைக் கழ