|
| உறைவார் - இறைஞ்சினார் - திருமடத்தில் மகிழ்ந் துறைகின்ற நாளில் - அணைந்து இறைஞ்சி யருளினார். |
| அறப் பெருஞ்செல்வக் காமக்கோட்டமணைந்து இறைஞ்சினார் - அறம் - அம்மையார் இறைவர்பால் வரம் பெற்று இங்கு எழுந்தருளியிருந்து அறங்களெல்லாவற்றையும் வளர்த்து உயிர்களைப் புரந்தருள்கின்றார் என்பது முன் விரிக்கப்பட்டது (1146 - 1148). பெருஞ் செல்வமாவது எல்லாவுயிர்களின் மேலும் பூண்ட கருணைச் செல்வம். சிவபெருமான் கோயிலையன்றி இவ்வாறு எந்தம் பரமாசாரியார்கள் தனியாகச் சத்தியாராலயத்தையேனும் வேறு கணபதி முருகன் முதலிய சிவபேத சத்திபேத மூர்த்திகளின் தனி ஆலயங்களையேனும் சென்று வணங்குதல் வேறெங்கும் பேசப்படாமை கருதுக. இது திருக்காமக் கோட்டத்துக்குரிய சிறப்பு. "உலகுய்யப் பேறு பெற்றவர் பிள்ளையாராதலின் உலகுய்ய எழுந்தருளியுள்ள அறப் பெருஞ்செல்வியினைச் சென்று இறைஞ்சினார் என்பது குறிப்பு. ஆளுடைய நம்பிகளும் இவ்வாறே வணங்கும் வரலாறும், அங்கு "ஊனில்வள ருயிர்க்கெல்லா மொழியாத கருணையினா, லானதிரு வறம்புரக்கும் அம்மை திருக்கோயில்" (ஏயர்கோன் - 284) என்பதும் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. |
| 998 |
2897 | திருவேகம் பத்தமர்ந்த செழுஞ்சுடரைச் சேவடியில் ஒருபோதுந் தப்பாதே யுள்ளுருகிப் பணிகின்றார் மருவுதிரு வியமகமும் வளரிருக்குக் குறண்மற்றும் பெருகுமிசைத் திருப்பதிகத் தொடைபுனைந்தார் பிள்ளையார். | |
| 999 |
| (இ-ள்) திருவேகம்பத் தமர்ந்த...பணிகின்றார் - திருவேகம்பத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள செழுமை பொருந்திய ஞானச்சுடராகிய இறைவரைத் திருவடியின் கீழ் வழிபாட்டுக்குரிய காலங்களில் ஒருபொழுதும் தவறாமல் மனமுருகிப் பணிகின்றவராகி; மருவு திருவியமகமும்...பிள்ளையார் - பிள்ளையார் அணிபொருந்திய திருவிய மகமும் பொருளால் வளர்கின்ற திருவிருக்குக் குறளும் இன்னும் வேறு பெருகுகின்ற இசையினையுடைய திருப்பதிக மாலையினையும் இறைவருக்குச் சாத்தியருளினர். |
| (வி-ரை) திருவேகம்பம் - கம்பரது கச்சித் திருக்கோயில். செழுஞ்சுடர் - ஞானச்சுடர் விளக்கு; சேவடியிற் - பணிகின்றார் - பிள்ளையார் - புனைந்தார் என்று முடிக்க. பணிகின்றார் - முற்றெச்சம். |
| ஒருபோதும் - வழிபாட்டுக்குரிய பூசைக் காலங்கள் எல்லாவற்றிலும்; "காலமெல்லாம்"(2062). |
| மருவு திருவியமகமும் - மருவுதல் - மடக்கு என்னும் சொல்லணி பொருந்துதல்; வளர் இருக்குக் குறள் - வளர்தலாவது சுருங்கிய சொல்லில் வளர்க்கின்ற பொருட்செறிவு நிற்றல்; இயமகம் - பாட்டின் அணிவகையும், இருக்குக் குறள் - பாட்டின் யாப்பு வகையுமாம். குறள்போன் றமைந்த இருசீர்அடி அளவாதலின் அப்பெயர் பெற்றது. |
| மற்றும் பெருகுமிசைத் திருப்பதிகத் தொடை - எண்உம்மை விரிக்க; இசை - பண்கை; பெருமை - புகழ் என்று கொண்டு இசை பெருகும் என்றலுமாம். |
| தொடை - மலை. சொல்லும் பொருளும் பயின்று வரத் தொடுப்பதாதலின் தொடை எனப்படும்; பதிகத் தொடை - என்றதனால் ஒரு பதிகம் என்றுரைக்கப்பட்டது; பதிகங்கள் என்றலுமாம். ஆனால் இப்போது கிடைத்துள்ளது "வெந்தவெண்பொடி" என்ற பதிகமொன்றேயாம்!. |