|
| திருவேகாம்பரத்தமர்ந்த - ஒரு பொழுதும் - என்பனவும் பாடங்கள். |
| 999 |
| II திருக்கச்சியேகம்பம் |
| திருச்சிற்றம்பலம் |
| திருவியமகம். | பண் - பழம்பஞ்சுரம் - 3-ம் திருமுறை | |
| பாயு மால்விடை மேலொரு பாகனே பாவை தன்னுரு மேலொரு பாகனே தூய வானவர் வேதத்து வனியே சோதி மாலெரி வேதத் துவனியே யாயு நன்பொரு ணுண்பொரு ளாதியே யால நீழ வரும்பொரு ளாதியே காய வின்மதன் பட்டது கம்பமே கண்ணு தற்பர மற்கிடங் கம்பமே. | |
| (1) |
| கந்த மார்பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு கம்பமே புந்தி செய்து விரும்பிப் புகலியே பூசு ரன்றன் விரும்பிப் புகலியே யந்த மில்பொர ளாயின கொண்டுமே யண்ண னின்பொரு ளாயின கொண்டுமே பந்த னின்னியல் பாடிய பத்துமே பாட வல்லவ ராயின பத்துமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - இறைவரது புகழ்களைப் பலவாற்றானும் சந்தம் படத் துதித்தது. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) பாகன் - (பாகு) செலுத்துபவன். பாகன்; பங்குடையவன்;- (2) வேதத் - துவனி - வேதவொலி. துவனி - ஒலி; வேதத்து - வ(ன்)னியே - வேத விதிப்படி வளர்க்கப்படும் எரி;- (3) ஆதியே - ஆதி - முதல்; நுண் பொருள் - பிரணவம்; ஆதியே - உள்ளவரே. ஆதல் - உளதாதல்; - (4) கம்பமே - அழிவு. கம்பம் - திருவேகம்பம். குறிப்பு : - உதாரணத்தின்பொருட்டுச் சில மட்டும் ஈண்டுத் தரப்பட்டன. இப்பதிக முழுதும் சிறந்த இலக்கியமாகவும் ஞானநூலாகவும் கற்று வல்ல பெரியார்களிடம் பாடமாகக் கேட்டுணரத்தக்கது. முன் திருவாலவாய்த் திருவியமகம் - திருக்கழுமலத் திருவிராகம் என்ற பதிகங்களின்கீ ழுரைத்தவையும் பார்க்க. -(11) (1) கம்பமே - திருவேகம்பம். கம்பம் - பிறவியால வரும் பயம் - துன்பம் - நடுக்கம். (2) புகலியே - சொல்லுக; விரும்பு இப்புகலியே - புகலி - சீகாழி. (3) பொருள் - உள்ளுறை; அண்ணலின் பொருள் - அருண் ஞானம். (4) பத்து - திருப்பாட்டுக்கள் பத்து; பத்து - அன்பரியல்பு. "பத்துடையீரீசன் பழவடியீர்"(திருவா). |
| III திருக்கச்சி ஏகம்பம் |
| திருச்சிற்றம்பலம் |
| திருவிருக்குக்குறள் | பண் - கொல்லி - 2-ம் திருமுறை | |
| கருவார் கச்சித், திருவே கம்பத், தொருவா வென்ன, மருவா வினையே. | |
| (1) |
| கொச்சை வேந்தன், கச்சிக் கம்பன், மெச்சுஞ் சொல்லி, நச்சும் புகழே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - திருவேகம்பத்தை ஏத்த வினைகள் நலியா. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) கருவார் கச்சி - இறைவர் இதனை, முன்னே அயனைப் படைத்து, அவனுக்கு வேதமோதுவித்து, இதைப் பார்த்து உலகு படைப்பாயாக என்றருளி வைத்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பு. "ஆதிநாண் முக்கணெம்மா னயன்றனைப் படைத்து வேத, மோதுவித் தருளி னோக்கி யுலகெலாம் படை |