|
| யென் றேவும், போதிது பார்த்திவ் வாறு படையெனப் புகன்று வைத்தா, னீதென லாகுங் காஞ்சி" என்ற காஞ்சிப் புராணம்(திருநகரப் படலம் - 3) பார்க்க. "மங்கையார் பங்கன் படைத்ததே யன்றி மலரயன் படைத்ததன் றதுவே" என்பது கந்தபுராணம்(திருநகரப் படலம் - 80). "நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும், அகிலயோ னிகளெல்லா மமைத்து வைத்த வரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும்"(1170) என்றதும் இக்குறிப்புத் தருவதாம். இப்பொருளெல்லாம் கருவார் கச்சி என்பதனுள் வைத்துக் கண்டுகொள்க. கரு - கருப்பம்; "கடையுகத்திற் றனிவெள்ளம் பலவிரிக்கும் கருப்பம்போல்"(1955) என்ற குறிப்பும், இது பிருதிவித் தலமாதலின் சிருட்டிக்கு முதலாதற் குறிப்பும் காண்க. என்ன - என்று சொல்ல - துதிக்க :- (2) மதியார் - மதி தவழும் மாடங்களும் சோலைகளும் உடைய. நதி - கம்பையாறு. விதி - ஆகம விதி. விதி - நல்லூழின் வரும் பக்குவம் என்றலுமாம். பதி - சிவத்தன்மை;- (3) கலி - "கலிக்கச்சி"(தேவா). பலவகை முழுக்குக்கள்(1195 பார்க்க) பலி - பசுபோதப் பலி; பலி விழா என்றலுமாம்;- (4) கச்சிப்புரம் - காஞ்சிபுரம்; பரவா - பரவி;- (5) படமார் - பளிங்கு மாளிகைகளது நிழலின் நிறைவு (1170); படம் - கொடிப்படங்கள் என்றலுமாம்;- (9) அனலன் - தீத்தூணாய் நின்றவன்;- (10) பறியாத் தேரர் - தலைமயிர் பறிக்கும் சமணரும் அவ்வாறு பறியாத் தேரரும் சொல்லும் என்க. நெறியில் - நெறியில்லாத; - (11) சொல்லை நச்சும் புகழே - சொல்லைப் புகழ் விரும்பி வரும். |
| மற்றும் பெருகுமிசைத் திருப்பதிகம் =(2897). |
| IV திருக்கச்சியேகம்பம் |
| திருச்சிற்றம்பலம் |
| | பண் - பழம்பஞ்சுரம் - 3-ம் திருமுறை | |
| வெந்தவெண் பொடிப்பூசு மார்பின் விரிநூ லொருபாற் பொருந்தக் கந்தமல்கு குழலியொடுங் கடிபொழிற் கச்சி தன்னுள் அந்தமில் குணத்தா ரவர்போற்ற வணங்கினோ டாடல்புரி எந்தை மேவிய வேகம்பந் தொழுதேத்த விடர்கெடுமே. | |
| (1) |
| ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்ப மேயவனைக் காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருட் பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - திருவேகம்ப மேத்த இடர் கெடும். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) வெந்த வெண்பொடி - திருநீறு; (3); கந்த மல்கு குழவி - கந்தம் - இயற்கை மணம். "ஏலவார் குழலா ளுமை" (நம்பி); அந்தமில் குணத்தா ரவர் போற்ற - 1159 பார்க்க. அணங்கினொ டாடல்புரி ஏகம்பம் - ஆடல் - அருட்கூத்து. ஏத்த இடம் கெடுமே - பதிகத்தின் மகுடம் ; - (2) குருந்தும்...பொழில் இஃது இறைவர் பூசனைக்காகும் நந்தவனம்; 240 பார்க்க; - (3) வண்ண வெண்பொடி - திருநீறு. "காண வினியது நீறு கவினைத் தருவது நீறு" (தேவா); - (4) சுடலை வெண்ணீ றணிந்து - இதனை 1 - 3-லும், ஈண்டும் கூறியது |