|
| புனருற்பவத்தின் பொருட்டு இறைவராடும் நிலைக்குறிப்பு. ஆடல்புரி (1) என்றதுமிக் குறிப்பு;- (9) கரவில் வண்கையினார்கள் - தொண்டை நாட்டவரின் ஈகைச் சிறப்பு. கரவு - ஈயாது ஒளித்தல். |
2898 | நீடுதிருப் பொழிற்காஞ்சி நெறிக்காரைக் காடிறைஞ்சிச் சூடுமதிக் கண்ணியார் துணைமலர்ச்சே வடிபாடி ஆடுமவ ரினிதமரு மனேகதங்கா வதம்பரவி மாடுதிருத் தானங்கள் பணிந்தேத்தி வைகுநாள்; | |
| 1000 |
2899 | எண்டிசையும் போற்றிசைக்குந் திருப்பதிமற் றதன்புறத்துத் தாண்டருட னினிதேகித் தொல்லைவிட முண்டிருண்ட ண்டர்மகிழ் மேற்றளியு முதலான கலந்தேத்தி ண்டுபெருங் காதலினால் வணங்கிமீண் டினிதிருந்தார். | |
| 1001 |
| 2898. (இ-ள்) நீடுதிரு....அடிபாடி - நீடுகின்ற பொழில்கள் சூழ்ந்த திருக்கச்சி - நெறிக்காரைக்காடு என்னும் திருக்கோயிலைச் சென்று வணங்கிச் சூடும் பிறையாகிய கண்ணியினையுடைய இறைவரது துணையாகிய மலர்போன்ற திருவடிகளைப் பாடி; ஆடுமவர்...பரவி - அருட்கூத்தியற்றும் இறைவர் இனிதாக எழுந்தருளியுள்ள திருக்கச்சி யனேகதங் காவதத்தினைத் துதித்து; மாடு...வைகு நாள் - பக்கத்தில் உள்ள இறைவரது திருக்கோயில்களையும் பணிந்து துதித்து எழுந்தருளி யிருக்கும் நாளில்; |
| 1000 |
| 2899. (இ-ள்) எண்திசையும்...இனிதேகி - எட்டுத் திசைகளிலுள்ளோர்களும் போற்றுகின்ற திருத்தலமாகிய காஞ்சிபுரத்தின் புறத்திலே திருத்தொண்டர்களுடன் கூடி இனிது சென்று; தொல்லை...கலந்தேத்தி - முன்னாளில் விடத்தினை உண்டு அதனாற் கருமை பெற்ற கண்டத்தையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருமேற்றளி முதலாகிய பதிகளைக் கலந்து சென்று துதித்து; மண்டு...வணங்கி - செறிந்த பெரிய காதலினாலே வணங்கி; மீண்டு இனிது இருந்தார் - திருக்கச்சி நகரின்கண் மீண்டு இனிதாக எழுந்தருளி அமர்ந்திருந்தருளினர். |
| 1001 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2898. (வி-ரை) நீடு திருப்பொழில் - நிடுதல் - நிலைபெற்றிருத்தல்;திருகாஞ்சி நெறிக்காரைக்காடு என்று கூட்டுக. |
| சூடுமதிக் கண்ணியார் - "வளர்மதிக் கண்ணியி னானை"(தேவா); மதியாகிய கண்ணி என்பது பிறை சூடுதல் தலையில் மாலை சூடுதல் போன்றிருந்தது என்பதாம். |
| துணை - இரண்டு; அன்பர்க்குத் துணையாகிய என்ற குறிப்பும்பட நின்றது. |
| ஆடுமவர் - ஆடுதல் - ஐந்தொழிற் றிருக்கூத் தியற்றுபவர். |
| மாடு திருத்தானங்கள் - "இறைவர் தாமகிழ்ந் தருளிய பதிக ளெண்ணி றந்தன வத்திரு நகரெல்லை"(1153) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. இவை வரும் வழியில் முன்னர்ப் (2890) பணிந்த கோயில்களல்லாது அத்திருநகரில் உள்ளவை. மாடு - பக்கம்; செல்வம் என்றலுமாம்; எண்ணிறந்த சிவத்தானங்களுடைமை கச்சிமா நகரின் சிறப்புச் செல்வமாம். இவற்றின் பிள்ளையார் பதிகங்கள் கிடைத்தில! |
| 1000 |