1270திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

I திருமாற்பேறு
திருச்சிற்றம்பலம்

பண் - பழந்தக்கராகம் - 1-ம் திருமுறை

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை, நீறு சேர்திரு மேனியர்,
சேறு சேர்வயற் றென்றிரு மாற்பேற்றின், மாறி லாமணி கண்டரே.

(1)

மன்னி மாலொடு சோமன் பணிசெயும், மன்னு மாற்பேற் றடிகளை,
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல், பன்ன வேவினை பாறுமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- திருமால் வழிபட்ட திருமாற்பேற்றின் மணிகண்டரே! உம்மை மேலையார்கள் விரும்புவர்; அடியார்கள் விரும்புவர்; வானவர் ஏத்துவர்; உம்மைப் பரவாதாரில்லை; உம்மைப் பரவுவார் வினை பாறும்; அருள் நல்குவீர்.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) ஊறியார் தரும் - ஊறி - செறிந்து; கேடு நிறைந்து; மணிகண்டர் - இத்தலச் சுவாமி பெயர்; "மையார் நஞ்சுண்டு" (3); "நீலமார் கண்ட" (4); - (2) அடியார்கள் அடைவாராம் என்று எழுவாய் தொக்கு நின்றது; - (3) பை - நச்சுப்பை; - (4) மேலையார்கள் - ஞானத்தால் மேம்பட்ட பெரியோர்கள்;- (5) ஏறவே - தாங்கள் வாழவே;- (6 - 7) அரையானே - அரசரே; - (8) ஒல்கிடக் கெடுத்தவன் - ஒல்குதல் - வலி குறைதல்; கெடுதல்;- (9) ஒருவரால் - ஒருவராலும்; முற்றும்மை தொக்கது. பாறும் - கெடும்; அழியும் ;- (10) கொள்ளெலும் - பொருளாகக் கொள்ளற்க; கொள்ளேல் என்பது ஈற்றயல் குறுகிக் கொள்ளெல் என நின்றது; - (11) மாலோடு சோமன் பணி செய - மாலும் சோமனும் வழிபட்டமை தல வரலாற்று விசேடம்; மால் வழிபட்டுப் பகைவரை வெல்லச் சக்கரம் பெற்றனர் என்ற வரலாற்றை முன் "மாலி னார்வழி பாடுசெய் மாற் பேறு" (4) என்ற பாட்டிலும் கூறப்பட்டது. அரசுகளது திருக்குறுந்தொகையும், தலவிசேடமும் பார்க்க.
II திருமாற்பேறு
திருச்சிற்றம்பலம்

பண் - வியாழுக்குறிஞ்சி - 1-ம் திருமுறை

குருந்தவன் குருகவன் கூர்மை யவன்
பெருந்தகை பெண்ணவ னாணு மவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யு
மருந்தவன் வளநகர் மாற் பேறே.

(1)

அந்தமின் ஞானசம் பந்தனல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி யெய்துவரே.

(11)

திருச்சிற்றம்பலம்.

பதிகக் குறிப்பு : - இறைவர் எழுந்தருளிய வளநகர் மாற்பேறே.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) குருந்து - குருகு - கூர்மை - இளமையும், முளையும், அதன் உள்ளீடாகிய உயிர்ச் சத்தும். பெருந்தகை - பெண் - ஆண் - அவ்