1272திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பதிகக் குறிப்பு :- முப்புரமெரித்தவன் - விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரிந்தவன் - உலகுக்குத் தாயவன் - பெய்தவன் பெருமழை உலகமுய்யச் செய்தவன் - சார்ந்தவர்க் கின்பங்க டழைக்கும் வண்ண நேர்ந்தவன் - பெரியவன் - என்றின்னோரன்ன தன்மைகளா லறியப்படுகின்ற இறைவ ருறைவிடம் திருவல்லமே.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) எரித்தவன் - தரித்தவன் - விரித்தவன் - பயனிலைகள் முன்வந்தமை திருவருளின் வரைவுக் குறிப்பு. திருமாற்பேற்றைக் கும்பிட்டு இங்குப் போந்தருளிய பிள்ளையார் அத்திருப்பதியின் "குருந்தவன்" என்ற பதிகப் பண் - கட்டளை - சந்தமாதிய அமைப்புக்களுடன் இங்குப் பதிகம் அருளிய நயம் காண்க. கண்டு சென்று (11) என்றமையால் இப்பதிகம் பதியின் புறத்தே அருளியதென்பது கருதப்படும். "திருவல்லம் வணங்கி" (2901) என்று ஆசிரியர் இதனைக் குறிப்பாலுணர்த்துதலும் காண்க. வேறுவேறு தெரித்தவன் - அவ்வவர் பக்குவத்துக்கேற்ப வெவ்வேறாகச் சமயங்களையும் சமயநூல்களையும் வேதங்களினின்றே விரிக்குமாறு தெரிவித்தவன்; இது சைவத்தின் சிறப்பாகிய கருத்து;- (2) தாயவன் - தாய் போன்றவன்; உலகங்களைத் தனது சத்தியாகிய மாயையினின்று தோற்றுவிப்பவன்; எல்லாம் ஆயவன் - "அவையே (தானே)யாய்" என்றது சிவஞானபோதம் 2-ம் சூத்திரம்; சேயவன் - விளங்காதவன்; - (3) போதகம் - யானை; - (4) கொய்தவன் மலரடி....வணங்க வைத்து - தம்மடியவரை வானவர் வணங்கவைப்பன்; திருமகள் - அடியவரைத் திருமகள் சார்ந்து பணி கேட்பள் என்பது. பெய்தவன்...செய்தவன் - மழையாய்ப் பெய்து உலகம் காப்பவன்;- (5) தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே - "நிகழ்ந்தவர் நேடுவார் நேடச் செய்தே" (8) - அன்புடன் தன்னைத் தேடுகின்றவர்க்குப் பின்னும் அறிவும் ஆசையும் கொடுத்துத் தன்னைப் பற்றச் செய்பவர்; - (6 - 7) மாமுனி - மார்க்கண்டேயர்;- (9) காணவொன்னாத் தெரியவன் - காணலாகாத தோற்றமுடையவன்: தெரி - தோற்றம்;- (10) அன்றிய - பகை பூண்ட;- (11) கற்றவர் திருவல்லங் கண்டு சென்று - கற்றவர் - அடிமைத் திறங் கற்ற பெரியோர். மறைகளைக் கற்றுத் துறைபோகியவர்; பதிக முதற்பாட்டுப் பார்க்க. "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை" (திருவிசை); கண்டு சென்று - சொன்ன - கண்டு வழிபட்டுச் சென்றபின் பதியை எண்ணியருளிய என்பது குறிப்பு.
தலவிசேடம் : - திருவல்லம் - தொண்டை நாட்டின் 10-வது பதி. திருவலம் என்று வழங்குகின்றது. "தீக்காலி" என்ற அவுணன் வழிபட்டுப் பேறுபெற்ற பதி என்ற காரணத்தால் இது "தீக்காலி வல்லம் " எனவும் வழங்கப்படும்; ("தீக்காலி" தனியாய் அடுத்து வடபுறம் உள்ளது) நவக்கோள்கள் இங்குப் பூசித்துப் பேறு பெற்றன என்பதும் வரலாறு. சுவாமி - வல்லநாதர்; அம்மை - வல்லாம்பிகை; கோயில் தென்பாலாற்றின் வடகரையில் - பொன்னையாறு - நிவாநதிக் கரையில் அழகாக அமைந்துள்ளது; தீர்த்தம் - பாலாறு; பதிகம் 1.
இது காட்டுப்பாடிக்கும் அரக்கோணத்துக்கு மிடையில் உள்ள திருவல்லம் என்ற நிலையத்தினின்றும் வடகிழக்கே கற்சாலை வழி ? நாழிகையளவில் அடையத்தக்கது.
திருஇலம்பையங்கோட்டூர்
2902
அங்குள்ள பிறபதியி னரிக்கரியார் கழல்வணங்கிப்
பொங்குபுனற் பால்யாற்றின் புடையில்வட பாலிறைவர்
எங்குமுறை பதிபணிவா ரிலம்பையங்கோட் டூரிசைஞ்சிச்
செங்கண்விடை யுகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.

1004