[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1277

முழுதுமளித்தவர் - உலகெலாம் படைத்தவர்; இது மாசங்காரத்தில் எல்லாவற்றையும் தம்முள் ஒடுக்கிப் புனருற்பவத்தில் மீள உளதாக்கும் முதல்வனாதல் குறித்தது. அளித்தவர் - காத்தவர் என்றலுமாம்; எல்லா வரங்களையும் வீடுபேற்றையும் அருள்பவர் என்றலும் பொருந்தும். அளித்தல் - அளியோடுங் கொடுத்தல்.
போந்தனர் - மேற்சென் றருளினர்.

1006

திருவூறல் (தக்கோலம்)
திருச்சிற்றம்பலம்

பண் - வியாழக் குறிஞ்சி - 1-ம் திருமுறை

மாறிலவு ணரரணம் மவை மாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்க ணிமலனிடம் வினவிற்
றேறலிரும் பொழிலுந் திகழ் செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல மர்ந்தபிரா னொலி யார்கழ லுள்கு துமே.

(1)

கோடலி ரும்புறவிற் கொடி மாடக் கொச்சையர்மன் மெச்ச
வோடு புனல்சடைமேற் கரந்தான் றிருவூறல்
நாடல ரும்புகழான் மிகு ஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத் திருப்பாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - இறைவரது இடமாகிய திருவூறலை யுள்குதுமே. பதிக மகுடம் பார்க்க.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) அரணம் - மதிலையுடைய கோட்டை. ஒலியார் கழல் - சிலம்பொலிக்கும் கழலணிந்த திருவடி; இடம் வினவில் அது திருவூறல். அதனை அமர்ந்த இறைவனது திருவடியையே உள்குதும் - நினைப்போம். அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல். இதனை "விருப்பினொடுந் திருவூறல் மேவினார் (2903) என்றருளினர் ஆசிரியர்; - (2) நீலம் நயனமொத்து அலரும் - நீலமலர்கள் கண்போல மலர்தற் கிடமாகிய; -(3) அழகார் - திருவூறல் என்று கூட்டுக. ஊனம் - ஆணவ மலம்; - (5 -6 - 7) சண்டீசர் சரிதம் குறித்தது. தாழும் - விரும்பும் - மகிழும். "கோயிலாகத் தாழ்ந்தீரே" (தலைச்சங்கை - தேவா); - (8) கறுத்த - சினந்த; மறுக்குறும் - அஞ்சிய; - (10) பொன்னியல் - துவர் நிறமுடைய. புளித் தட்டை - அமணர்களின் கவள வுணவு வகை; உடை குறித்தது எனிலுமாம். "தென்"னென - ஒலிக் குறிப்பு. அழகார் - திருவூறல் - என்க; 3-வது பாட்டுப் பார்க்க; - (11) மிக்க ஒடுபுனல் சடைமேற்கரந்தான் - இத்தலத்தின் நீர்ப்பெருக்குக் குறிப்பு.
தலவிசேடம் :- திருவூறல் (தக்கோலம்) - தொண்டை நாட்டின் 12-வது பதி. இது தக்கோலம் என்ற ஊர்ப்பெயரால் விளக்கமாக அறியப்பட்டு வழங்கப்படுகின்றது. ஊறல் - இறைவர் எழுந்தருளியுள்ள தானத்தின் பெயர்; சுவாமியின் திருவடியினின்றும் நீர் பெருகிவருவதால் இப்பெயர் பெற்றது. சுவாமி பெயர் சலநாதேசுவரர் என வழங்குவதும் காண்க. தேவ குருவாகிய வியாழனுடைய தம்பி சம்வர்த்த முனிவர் தவம் புரிந்து வழிபட்ட வரலாறுபற்றி ஆசிரியர் சேக்கிழார் தமது புராணத்துள் (2904) போற்றியமை காண்க. இத்திருக்கோயில் குசஸ்தல ஆறு என்னும் பழைய பாலாற்றின் (விருத்தக்ஷீர நதி என வடமொழியாக்கி யுரைப்பர்) கரையில் அமைந்துள்ளது. இதனை அடுத்து மதிலோரத்தில் கிழக்கே உள்ள கங்காதரர் சந்நிதி மேற்குப் பிரகாரத்தில் இடபத்தின் வாயில் எப்போதும் நீர் பெருகிவருவது தலப்பெருமையைக்