1278திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

கண்கூடாகக் காட்டுவதாம்; பதிகம் 11-வது பாட்டுப் பார்க்க. சுவாமி - உமாபதீசுவரர்; அம்மை - உமையம்மை; பதிகம் 1.
இது தக்கோலம் என்னும் நிலையத்தினின்றும் வடகிழக்கே மட்சாலை வழி 4 நாழிகையளவில் அடையத் தக்கது.
திருவாலங்காடு
2905
குன்றநெடுஞ் சிலையாளர் குலவியபல் பதிபிறவும்
நின்றவிருப் புடனிறைஞ்சி, நீடுதிருத் தொண்டருடன்
பொன்றயங்கு மணிமாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்றணைந்தார் பழயனூர்த் திருவாலங் காட்டருகு.

1007

(இ-ள்) குன்ற நெடுஞ் சிலையாளர்....இறைஞ்சி - பொன் மலையினை வில்லாகவுடைய இறைவனார் விளங்க எழுந்தருளிய பல பிற பதிகளையும் நிலையான விருப்பத்துடனே சென்று வணங்கி; நீடு திருத்தொண்டருடன்...திருவாலங்காட்டருகு - பொன் விளங்கும் அழகிய மாடங்களையுடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார் அன்பு நீடிய பெருந் தொண்டர்களுடனே பழயனூர்த் திருவாலங்காட்டின் அணிமையிற் சென்று அணைந்தருளினர்.
(வி-ரை) குன்றம் - மேருமலை; சிலை - வில்; திரிபுர சங்கார காலத்தில் மேருமலையினையே வல்லாக வளைத்து இறைவர் ஏந்தினர் என்பது வரலாறு.
பல்பதி பிறவும் - இவை திருவூறலின்றும் திருவாலங்காட்டுக்குச் செல்லும் வழியில் இடையில் உள்ளனவும் அணிமையில் உள்ளனவுமாம்; இவை மணவூர், திருஎவ்வளூர் முதலாயின என்பது கருதப்படும்.
திருநீடு தொண்டர் - திரு - சிவன்பாலும் அடியார்பாலும் கொண்ட பேரன்பின் சிறப்பு; நீடுதல் - இடையறாது பெருகுதல்.
பொன் தயங்குதல் - பொன்னால் அழகு செய்யப்பட்டு விளங்குதல்.
பழயனூர்த் திருவாலங்காடு - இவை யிரண்டும் இணைத்தே வழங்கப்படும். தேவாரப் பதிகங்களும் தலவரலாறும் பார்க்க. அருகு - அணிமையில்.
அருகு சென்றணைந்தார் - என்க. வினைமுற்று முன் வந்தது ஆர்வ மிகுதியால் நேர்ந்த விரைவுக் குறிப்பு. பிற்சரித நிகழ்ச்சி கருதுக.

1007

வேறு

2906
"இம்மையிலே புவியுள்ளோர் யாருங் காண,
  வேழுலகும் போற்றிசைப்ப, வெம்மை யாளும்
அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும்
  அம்மையப்பர் திருவாலங் காடா" மென்று
தம்மையுடை யவர் மூதூர்மிதிக்க வஞ்சிச்,
  சண்பைவருஞ் சிகாமணியார் சாரச் சென்று,
செம்மைநெறி வழுவாத பதியின் மாடோர்
  செழும்பதியி னன்றிரவு பள்ளி சேர்ந்தார்.

1008

(இ-ள்) "இம்மையிலே...திருவாலங்காடாம்" என்று - இப்பிறவியிலே நிலவுலகத்தவர்கள் எல்லாரும் நேரே காணும்படி, ஏழுலகங்களிலுள்ளாரும் துதிக்கும்படி, எம்மை யாட்கொண்டருளும் அம்மையாராகிய காரைக்காலம்மையார் தமது திருத்தலையினாலே நடந்துசென் றடைந்து போற்றியிருக்கின்ற அம்மையப்பர் எழுந்தருளிய பதி