[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1279

இத் திருவாலங்காடாகும்" என்று உட்கொண்டு; தம்மை...அஞ்சி - தம்மை ஆளுடைய இறைவரது பழைமைபொருந்திய அவ்வூரினைக் காலால் மிதித்து உட்செல்வதற்குப் பயந்து; சண்பை வரும்...சென்று - சீகாழியில் வந்தருளிய தலைவருட் சிறந்தவராகிய பிள்ளையார் அப்பதியினருகு சாரப் போய்; செம்மை நெறி...பள்ளி சேர்ந்தார்; செம்மை நெறியினின்று சிறிதும் வழுவாத தூய ஒழுக்கமுடையவர்கள் வாழ்கின்ற அத்திருப்பதியின் பக்கத்தில் ஒரு செழிய நகரின்கண் அன்று இரவிலே தங்கிப் பள்ளி கொண்டருளினர்.
(வி-ரை) இம்மை - இப்பிறப்பு. யாருங் காண ஏழுலகும் போற்றிசைப்ப - தலையாலே நடந்து - அம்மை புராணம் பார்க்க (1778 - 1779).
எம்மை ஆளும் அம்மை - காரைக்காலம்மையார். இறைவர் "அம்மை" என அழைத்தருளப்பெற்ற தன்மையால் எம்மை ஆளும் தன்மையுடையார்.
அம்மையப்பர் - அம்மை, அப்பாவென்று வழிபட்டவர் என்றும், உமையம்மையுடன் கூடிய அப்பர் என்றும் உரைக்க நின்றது.
திருவாலங்காடாம் என்று - இது அத்திருவாலங்காடு ஆகும் பதி என்று நினைந்து; மிதியாமைக்குக் காரணம் கூறியபடி. அம்மை தலையால் நடந்து போற்றும் பதியைக் காலால் மிதித்தல் தகாதென்பது. அரசுகள் கைத்தொண்டு செய்த திருஅதிகைப் பதியை மிதிக்க அஞ்சி ஆரூர் நம்பிகள் அப்பதியின் புறத்துச் சித்தவடமடத்தில் துயின்றருள இறைவர் திருவடி சூட்டிய வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. 229-ம் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
சிகாமணியார் - சைவத் தலைவர். தலைவராதலின் சைவத்திறம் இத்தன்மைத்து என்று ஒழுகிக் காட்டியருளினர் என்பது குறிப்பு.
சார - அப்பதியினை அணுக; அருகில்.
செம்மை நேறி வழுவாத செழும் பதி - செம்மை நெறி - மெய்ம்மை நெறி. பதியினரது நெறி வழுவாத தன்மை பதியின்மேல் ஏற்றப்பட்டது. "மெய்ம்மை நிலை வழுவாத மேன்மைநெறி விழுக்குடிமைச், செம்மையினார்" (1606) என இக்கருத்தை முன்னரே விளக்கியருளினா ராதலின் இங்குச் சுருக்கிக் கூறினார். மெய்ம்மை நிலையும் முன் விரிக்கப்பட்டது; கண்டுகொள்க. மெய்ம்மையே செம்மை - சத்து - எனப்படும். செம்மை சிவத்தன்மை; மேல்வரும் பாட்டும் பதிகமும் பார்க்க.
மாடோர் செழும்பதி - பக்கத்தில் உள்ள ஓர் ஊர்; செழும் பதி - பிள்ளையார் தங்கியருளியமையாலும், அங்குத் திருவாலங்காட் டிறைவர் எழுந்தருளப் பெற்றுத் திருப்பதிகமும் பாடப்பெற்றமையாலும் செழிப்புப் பெற்ற பதி என்பது குறிப்பு. இப்பதி யாது என்று தெரியக்கூடவில்லை.

1008

2907
மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
  மறையவனார் தம்முன்பு கனவி லேவந்
தாலவனத் தமாந்தருளு மப்பர் "நம்மை
  யயர்த்தனையோ பாடுதற்"கென் றருளிச் செய்ய
ஞாலமிரு ணீங்கவரும் புகலி வேந்தர்
  நடுவிருள்யா மத்தினிடைத் தொழுது ணர்ந்து,
வேலைவிட முண்டவர்தங் கருணை போற்றி
  மெய்யுருகித் திருப்பதிகம் விளம்ப லுற்றார்;

1009