|
2908 | "துஞ்சவரு வர்"ரென்றே யெடுத்த வோசைச் சுருதிமுறை வழுவாமற் றொடுத்த பாடல் எஞ்சலிலா வகைமுறையே பழைய னூரா ரியம்புமொழி காத்தகதை சிறப்பித் தேத்தி "யஞ்சனமா கரியுரித்தா ரருளா" மென்றே யருளும்வகை திருக்டைக்காப் பமையச் சாத்திப் பஞ்சுரமாம் பழையதிறங் கிழமை கொள்ளப் பாடினார் பாரெல்லா முய்ய வந்தார். | |
| 1010 |
| 2907. (இ-ள்) மாலையிடை யாமத்து....கனவிலே வந்து - மாலைப்பொழுது முற்றிய நடுயாமத்திலே பள்ளிகொண்டருளுகின்ற வேதியராகிய பிள்ளையாருடைய கனவிலே எழுந்தருளி வெளிப்பட்டு; ஆலவனத்து....அருளிச் செய்ய - திருவாலங்காட்டில் விரும்பி எழுந்தருளும் அப்பனார் "நம்மைப் பாடுதற்கு மறந்தாயோ?" என்று அருளிச் செய்யவே; ஞாலம்...உணர்ந்து - உலகம் இருணீங்கி யுய்யும் பொருட்டு அவதரித்த சீகாழித் தலைவராகிய பிள்ளையார் நள்ளிருள் யாமத்திலே தொழுதுகொண்டபடியே துயிலுணர்ந்து எழுந்து; வேலைவிடம்... விளம்பலுற்றார் - கடலில் வந்த நஞ்சினை அமுது செய்தருளிய இறைவருடைய திருக்கருணையினைப் போற்றி மெய்யுருகித் திருப்பதிகம் பாடலாயினராகி; |
| 1009 |
| 2908. (இ-ள்) "துஞ்ச வருவார்...பாடல் - "துஞ்ச வருவாரும்" என்றே தொடங்கிய, ஓசையுடைய வேதத்தின் முறை தவறாதபடி பாடிய பாடலில்; எஞ்சலிலா வகை....ஏத்தி - குறைவில்லாத வகையினாலே நீதிமுறையின் வழி பழையனூர் வேளாளர்கள் தாங்கள் சொல்லிய சொல்லைத் தவறாது காத்து அருள்பெற்ற சரிதத்தைச் சிறப்பாகப் பாராட்டிப் போற்றி; அஞ்சனமா கரி உரித்தார்...அமையச் சாத்தி - "கரிய யானையை உரித்த இறைவரது திருவருளேயாகும் இது" என்று அவர் அருள்புரியும் தன்மையைத் திருக்கடைக்காப்பில் பொருந்தவைத்து; பஞ்சுரமாம்...வந்தார் - குறிஞ்சியாழ்ப் பண்ணமைதித் திறமும் கிழமையும் பொருந்தப் பாடியருளினார் உலகமெல்லாம் உய்யும்பொருட்டு அவதரித்த பிள்ளையார். |
| 1010 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2907. (வி-ரை) மாலையிடை யாமம் - பகலின் இடையாமமு முளதாதலின் மாலையிடை யென்று பிரித்தொதினார். பிதினியைபு நீக்கிய விசேடணம். மாலை கழிந்த இடையாமம். இடை - முன்னைநாளுக்கும் பின்னை நாளுக்கும் இடை. யாமம் - நள்ளிரவு; "கூதிர் யாம மென்மனார் புலவர்" (தொல் - பொரு - அக - 6). |
| ஆலவனத் தமர்ந்தருளு மப்பர் - "ஆலங்காட் டப்பர்" (புராண வரலாறு - 5) "அம்மையப்பர்" (2906); ஆலங்காட் டிறைவர் திருப்பெயர் இவ்வாறு அப்பர் என வழங்கப்படுவது; "அவிநாசி யப்பா" முதலியவை காண்க. |
| "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று - அயர்த்தல் - மறத்தல்; "ஒரு நாள் அருளாலே அயர்த்துண்ணப் புகுகின்றார்", "எறியா தயர்த்தேன்" (சாக்கியர் புராணம் - 15); "அயர்த்தவாறே" (தேவா). திருவாலங்காட்டின் இறைவரை மறவாது வந்தடைந்தாராதலானும், அங்கு அம்மை தலையால் நடந்து எய்தித் திருவடிக்கீழ் என்றும் இருக்கின்ற நிலையினை மறவாது மனத்துட்கொண்டே பள்ளிகொள்கின்றாராதலானும், என்றும் திருவடி மறவாப்பான்மையோ ராதலானும், அயர்த்தனையோ? என்றொழியாது பாடுதற்கு என்று அடுத்துக் கூறியருளினார். மறவா நிலையேயாயினும் |