|
| திருவாலங்காடு |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - தக்கராகம் - 1-ம் திருமுறை |
| துஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரு முனைநட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனூ ராலங் காட்டெம் மடிகளே. | |
| (1) |
| கேடும் பிறவியு மாக்கி னாருங் கேடிலா வீடு மாநேறி விளம்பி னாரெம் விகிர்தனார் காடுஞ் சுடலையுங் கைக்கொண்ட டெல்லிற் கணப்பேயோ டாடும் பழயனூ ராலங் காட்டெம் மடிகளே. | |
| (2) |
| சாந்தங் கமழ்மறுகிற் சண்பை ஞான சம்பந்த னாந்தண் பழையனூ ராலங் காட்டெம் மடிகளை வேந்த னருளாலே விரித்த பாட லிவைவல்லார் சேர்ந்த விடமெல்லாந் தீர்த்த மாகச் சேர்வாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - ஆசிரியர்(2908) விரித்துக் காட்டியருளியவாறு கண்டு கொள்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) துஞ்ச வருவார் - துயிலும்போது கனவில் வருவார்; தொழுவிப்பார் - வேண்டிப் பணி கொள்வார்; வழுவிப்போய்...நினைவிப்பார் - முன்னமே துதித்துப் பாட மறந்தமையை மனத்துள் வந்து நினைவுபடுத்திப் பணி கொள்வர்; "நானேது மறியாமே யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்ட நின்றாய்"(தாண்); இவையும் மேல் "வேந்த னருளாலே விரித்த பாடலிவை" (11) என்பதும் சரித வரலாற்றின் சிறந்த அகச்சான்றாதல் காண்க; முனைநட்பாய்....அஞ்சும் பழையனூர் - "பழையனூரார் இயம்புமொழி காத்த கதை"(2908) என்றது; பழையனூரும் திருவாலங்காடும் அடுத்துள்ளன. இரண்டும சேர்த்து ஒரு பதியாகப் போற்றப்பட்டன; - (2) கேடு - இறப்பு; ஆக்குதல் - உயிர்களுக்குப் பிறவி கொடுத்து மலம் போக்குதல்; கேடிலா....விளம்பினார் - பிறவி தருதல் வீடுபேறடையச் செய்தற்கு என்பது; விளம்பினார் - வேதாகம மாதியவற்றால் அறிவுறுத்தினார்; காடும்...ஆடும் - அம்மை மூத்ததிருப்பதிகங்கள் பார்க்க ; - (3) கொந்தண் - கொந்து தண் என்பது கொந்தண் என நின்றது; அரவிற்றோன்றிக் கோடல் பூத்து - கோடல் - காந்தள்; காந்தட்பூ பாம்பின் படம்போல விரியும் என்ப. "காந்தள் பாந்தள் காட்ட" - "கோட லரவீனும்" ; - (4) பால்வெண் - பால்போன்ற வெண்மையுடைய; காலன்உயிர் செற்ற காலன் - சொற்பின் வருநிைலை; காலன் - பின்னையது காலினை உடையவன்; காலத்தின் கடவுள் என்றலுமாம்; கருத்தனார் என்ற கருத்துமது. மஞ்ஞை - மயில்; குறிஞ்சிக் கருப்பொருள்; - (5) முல்லை - குருந்தம் - முல்லைக் கருப்பொருள். தேன் - வண்டுவகை; - (7) நுணங்கு மறை - நுண்ணிய பொருள் கூறும் மறை; சிறுத்தொண்டர் - வேளாளர்; "பழையனூர்ச் சிறுத்தொண்டர்" (1080) தொண்டர் முன் சிறியராயடைபவர் என்பது சொற்பொருள் (சிறுத். புரா - 15 பார்க்க); அணங்குதல் - அருள் தருதல்; - (8) பிணை - பெட்டை மான்; சிறுமறி - மான்கன்று; கலை - ஆண்மான். இவை பெருங் கூட்டமாய் வாழ்ந்து வருமியல்பு குறித்தது. மான் - முல்லைக் கருப்பொருள்; - (9) பரிந்தார் - பாடல் கேட்டு இரங்கி யருள்கொடுத்தார் ; - (10) பகலு மிரவுஞ்சேர் பண்பினார் - |