1284திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பகல் - ஒளி; இரவு - இருள். "ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடம்" (கொடிக்கவி); பகல் - இன்பம்; இரவு - துன்பம் என்றலுமாம். "சோதியு மாயிரு ளாயினார்க்குத் துன்பமுமா யின்ப மாயினாருக்கு"(திருவாசகம்); நண்பு - அடிமைத்திறமாகிய அன்பு; - (11) போழம் - மாறுபடும் சொல்; "உண்டு இல்லை" என்னும் புத்த மந்திரம். வேழம் வருமளவும் - மிதுன ராசியிற் சூரியன் உள்ள அளவும்; வெயிலே துற்றி - வெயிலினின்றும்; சமண குருமார் வழக்குக்களுள் ஒன்று; கேழல் வினைபோக - கேழல் - ஒப்பற்ற; வினைகளும் போக; எல்லார்க்கு மிறைவராதலின் அவ்வவர்களுக்கும் வினைப்பயன் கொடுத்துக் கழிப்பிப்பர். வாழ்வர் - வாழ்வுடையவர்; - (12) வேந்த னருளாலே விரித்த பாடல் இவை - நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்று அருளியபடி பாடிய என்ற சரிதச் சான்று. வேந்தன் - இறைவர் பாட ஆணையிட்டாராதலின் வேந்தன் என்றார். சேர்ந்தவிடமெல்லாந் தீர்த்தமாக - தீர்த்தம் - தூய்மை செய்வது; "சென்றாடு தீர்த்தங்க ளானார்தாமே" என்ற இப்பதியின் திருத்தாண்டகக் கருத்தும் காண்க.
தலவிசேடம் : - திருவாலங்காடு - மூவர் பதிகங்களும் அம்மையாரது மூத்த பதிகங்களும் பெற்ற தனிச் சிறப்புடைய பதி; தலவிசேடம் III - பக்கம் 579 பார்க்க.
2909
நீடுமிசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி
  நெடுங்கங்கு லிருணீங்கி நிகழ்ந்த காலை
மாடு திருத் தொண்டர்குழா மணைந்த போது
  மாலையினிற் றிருவால வனத்து மன்னி
ஆடுமவ ரருள்செய்த படியை யெல்லா
  மருளிச்செய் தகமலரப் பாடி யேத்திச்,
சேடர்பயி றிருப்பதியைத் தொழுது போந்து
  திருப்பாசூ ரதன்மருங்கு செல்ல லுற்றார்.

1011

திருப்பாசூர்
2910
திருப்பாசூ ரணைந்தருளி யங்கு மற்றச்
  செழும்பதியோ ரெதிர்கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா கத்துப்
  புராதனர்வே யிடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து
  வீழ்ந்தெழுந்து மேனியெலா முகிழ்ப்ப நின்றே
அருட்கருணைத் திருவாள னாமஞ் "சிந்தை
  யிடையா"ரென் றிசைப்பதிக மருளிச் செய்தார்.

1012

2909. (இ-ள்) நீடும்....போற்றி - எக்காலமும் நீடும் இசையினையுடைய திருப்பதிகத்தினைப் பாடித் துதித்த பின்பு; நெடுங் கங்குல்...அணைந்தபோது - நீண்ட இரவு இருள் நீங்கி விடிந்தகாலையில் பக்கத்தில் திருத்தொண்டர் கூட்டம் வந்து அணைந்தபோது; மாலையினில்...அருளிச் செய்து - மாலை முதிர்ந்த இரவிலே திருவாலங்காட்டில் நிலைபெறப் பொருந்தி ஆடுகின்ற இறைவர் எழுந்தருளி அருளிச் செய்தபடியினை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லியருளி; அகமலரப் பாடி ஏத்தி - அத்திருப்பதிகத்தினை மீளவும் மனமகிழ்ப் பாடித் துதித்துப் பின்பு; சேடர்பயில்...போந்து - பெருமையுடையோர்கள் வாழ்கின்ற அந்தத் திருப்பதியினைத் தொழுது