1286திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

சேடர் பயில் - சேடர் - பெருமையுடையோர்; பெருமையாவது "மெய்ம்மை நெறி வழுவாத விழுக்குடிமைச் செம்மை"; சேடர் - அறிவுடையோர் என்றலுமாம்.
திருப்பதியைத் தொழுது - உட்புகாமையின் புறத்திருந்தபடியே பதியைத் தொழுது.
தொழுது போற்றி - என்பதும் பாடம்.

1011

2910. (வி-ரை) திருப்பாசூர் அணைந்தருளி - திருப்பாசூர் மருங்கு சென்ற (2909) பிள்ளையார் அந்நகரிற் சேர்ந்து.
புராதனர் - "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளா" யுள்ளவர்.
வேய் இடங்கொண்ட புனிதர் - வேய் - மூங்கில்; சுவாமி இப்பதியில் மூங்கிலடியில் முளைத்து எழுந்தருளியுள்ளார் என்பது தலவிசேடமாதலின் அதுபற்றிக் கூறியருளினார். பாசு - மூங்கில். அதுபற்றிப் பாசூர் என்ற ஊர்ப்பெயரும் போந்ததென்பர்.
முகிழ்த்தல் - மயிர்ப்புளகம் கொள்ளுதல்.
அருட்கருணைத் திருவாளன் - அருட்கருணை - ஒருபொருட் பன்மொழி; மிகுதி குறித்தது; திரு - அருட்டிரு; அழியாத முத்தித்திரு என்றலுமாம்.
நாமம் "சிந்தை யிடையார்" என்று - சிந்தையிடையார் - தலையின்மிசையார் - செஞ்சொல்லார் - என்மனத்துள்ளார் - மைந்தர் - மணாளர் - முதலியனவாகப் பதிகத்துக் கூறப்படுவன எல்லாம் அவரது திருநாமங்களேயாகி, அவற்றை எடுத்துச் சொல்லிப் போற்றியது பதிகக் குறிப்பு என்றவாறாயிற்று.
இசைப் பதிகம் - இசையுடன் கூடிய பதிகம். இசை - புகழ் என்றலுமாம்; இசைப்பா என்புழிப்போல.

1012

திருப்பாசூர்
திருச்சிற்றம்பலம்

பண் - காந்தாரம் - 2-ம் திருமுறை

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவிச் சோலை சூழ்ந்த பாசூரே.

(1)

ஞான முணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாட லிவைவல்லார்
ஊன மிலரா யும்பர் வானத் துறைவாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு : - அருட்கருணைத் திருவாள னாமஞ் "சிந்தை யிடையார்" என்பது முதலியனவாகப் போற்றியது என 2910-ல் ஆசிரியர் காட்டியருளினர்.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) சிந்தை இடையார் - சிந்தையினை இடமாகக் கொண்டுள்ளவர். இடையார் - மிசையார் - சொல்லார் - முதலியனவாக இப்பதிகப் பாட்டுக்கள்தோறும் வருவனவெல்லாம் இறைவரது பேரருட்டன்மகளைப் பற்றி எடுத்துக் கூறும் வகையால் அடியார்கள் சொல்லிப் பரவு நாமங்களாம் என்றவாறு; சிந்தையிடையார்...தலையின்மிசையார் - "சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்