|
| சேர, வந்தவர் வாழ்க" (திருவுந்தி - 45); மாலை வைகும்போது - பள்ளிகொள்ளும் போதும்; சிறப்பும்மை தொக்கது. மாலை - துன்பத்துக்குக் குறியீடாகக் கொண்டு; துன்பம் வந்தபோதும் என்றலுமாம். என் மனத்துள்ளார் - மறவாநிலை குறித்தது. திருவாலங்காட்டி லருளிய நினைவுக் குறிப்புமாம் ; - (2) பேரும்பொழுது - பெயரும் பொழுது - இன்ப துன்பங்களாகிய நிலை குறித்தது. பேர்தல் - உள்ளங் கிளர்ச்சியுற்று மகிழ்தல்; பெயர்தல் - அந்நிலை மாறுதல்; "இடரினும் தளரினும்" (திருவாவடுதுறை) என்ற பதிகக் கருத்துக் காண்க. ஆர்தல் - உள்ளம் அமைவுபடுதல்; தனை - அளவு குறிப்பது; பரின் மிசையார் - உலகத்துள்ளார்களது; - (3) கையால்...கசிவார்கள் - வழிபடுநிலை; மெய்பார் குறை - உடம்பு வருதற்கேதுவாகிய குறை - பழவினை. நெய்யாடுதல் - இங்குத் திருமஞ்சனம் என்ற பொருளில் வந்தது; அஞ்சு - ஆனைந்து; நாகம் - நாகம் போன்ற தோற்றம்; ஈனும் - காட்டும; - (4) பொங்குதல் - ஆடுதல் - இரண்டு தன்மைகளும் அரவு - புனல் இரண்டற்குமுரியன. புனல் - கங்கை; புனல் ஆடுதலாவது அசைந்திழிந் ஓடுதல்; ஆடுதலுமாம். பைங்கான் - பசிய காம்பு; கான் - காடுமாம்; - (5) சேடச் செல்வர் - ஞானிகள்; கானின்றதிர - ஒரு காலால் நின்றாடுதலால் உலக மசைவுகொள்ள. "கழலொலி யோசைச் சிலம்பொலிப்பக் காலுயர் வட்டணை யிட்டுநட்டம்" (அம்மை. மூத்த. பதிகம் - நட்டபாடை - 7); மால் - இறைவன்பால்வைத்த ஆசை மயக்கம்; "பித்துப் பத்தரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரும், மெய்த்தவர்"(போதம்); "மருளார் மனத்தோ ருன்மத்தன்" (திருவா - பிரார் - 3); மையல் - உலக மயக்கம்; இஃது ஆணவத்தாலாவது; - (7) கண்ணினயலே கண் ஒன்று - நெற்றியில் உள்ள அனற் கண்; - (9) நகுவாய் - விரிந்த வாயினையுடைய; இதழ் விரிந்த. ஓரார் - ஓராராகி; ஓர்ந்து. ஓவார் - ஒழியார். செகுவாய் - செகுத்தல்; இறந்துபடல்; இறத்தலால் வாய்த்த. பல் - உகு என்க; - (10) தூய வெயில் - பொருள்களைத் தூய்மை செய்வது சூரியன் கதிர்கள் என்பது. வெய்ய - வெவ்வியன - கொடியனவாகிய - சொற்களை; அகரவீற்றுப் பலவறிசொல்; இரண்டனுருபு தொக்கது. காவல் - காவலுடைய மும்மதில்; ஆகுபெயர். பாவைக் குரவம் - பாவை போன்ற உருவுடைய குராமலர்; "குரவம்பாவை" (பிள்.தேவா- குற்றாலம்- குறிஞ்சி); - (11) தேன் - வண்டு வகை. |
| தலவிசேடம் : - திருப்பாசூர் - III பக்கம் 576 பார்க்க. |
| திருக்காளத்தி |
2911 | மன்னுதிருப் பதிகவிசை பாடிப் போற்றி, வணங்கிப்போந் தப்பதியில் வைகி, மாடு பிஞ்ஞகர்தம் வெண்பாக்க முதலா யுள்ள பிறபதிகள் பணிந்தணைவார் பெருகு மன்பால் முன்னிறைந்த திருவாய்மஞ் சனநீ ராட்டும் முதல்வேடர் கண்ணப்ப நாயனாரை யுன்னியொளிர் காளத்தி மலைவ ணங்க வுற்றபெரு வேட்கையுட னுவந்து சென்றார். | |
| 1013 |
| (இ-ள்) மன்னு...வைகி - நிலைபெற்ற இசையுடைய திருப்பதிகத்தினைப் பாடித் துதித்து வணங்கிச் சென்று அந்தத் திருப்பதியில் தங்கியிருந்து; மாடு...பணிந்தணைவார் - பக்கத்தில் இறைவர் எழுந்தருளிய திருவெண்பாக்கம் முதலாகிய பிற பதிகளையும் பணிந்து சேர்வாராகி; பெருகும்...உன்னி - பெருகும் அன்பினால் முன்னே |