[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1289

உய்விக்கும் கருணைக் கவிநயமாம். கண்ணப்ப நாயனாரை அரசுகள் புராணத்துள் துதிக்க நேர்ந்தபின் (1611) இதுவரை இடையீடு நீண்டமையான் வந்த ஆராமைக் குறிப்பும் காண்க.
உவந்து சென்றார் - பிள்ளையார் செல்லும் அந்நிலத்து வழி அந்த அன்புமீக் கூர்ந்து செல்வார்க்கன்றி உவப்புடன் செல்லலாகாதபடி கடுமையானது என்பது குறிப்பு. இதனை மேல்வரும் பாட்டில் "பெரு வன்புலக் கான்" என விரிப்பது காண்க.

1013

2912
மிக்கபெருங் காதலுடன் றொண்டர் சூழ
  மென்புனனாட் டினையகன்று வெற்புங் கானுந்
தொக்கபெரு வன்புலக்கா னடைந்து போகிச்
  சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி
முக்கண்முதற் றலைவனிட மாகி யுள்ள
  முகினெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று
புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப்
  பூதியரோ டுடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர்.

1014

(இ-ள்) மிக்க பெரும்...அகன்று - மிகுந்த பெரிய விருப்பத்துடன் திருத் தொண்டர்கள் சூழ்ந்துவரச் சென்று மெல்லிதாய்ப் பாயும் நீர்வளமுடைய பாலியாற்றின் வடகரையில் உள்ள அந்நாட்டின் பகுதியை நீங்கி; வெற்புங் கானும்..போகி - மலையும் கானமுமாகச் சேர்ந்து நெருங்கிய பெருகிய வலிய நிலம் பரந்த காட்டிடங்களை அடைந்து சென்று; சூல கபாலக் கரத்து.....சென்று - சூலமும் கபாலமும் கையிலேந்தி ஒளி விளங்கும் திருமேனியினையும் மூன்று கண்களையுமுடைய முழு முதல்வராகிய இறைவரது இடமாகி முகில்சூழ்ந்துள்ள திருக்காரிகரையினை முன்னச் சென்று; புக்கிறைஞ்சி.....வேந்தர் - திருக்கோயிலுள்ளே புகுந்து இறைவரை வணங்கித் துதித்து அந்தப் பதியில் தங்கித் திருநீற்றுத் தொண்டர்களுடன் கூடி மகிழ்ந்திருந்தனர் சீகாழித் தலைவராகிய பிள்ளையார்.
(வி-ரை) காதலுடன்...வன்புரலக் கான் அடைந்து போகி - வன்மையுடைய புலமுள்ள வெற்பும் கானமுமாயுள்ள நிலத்திற் செல்வதற்கு காதல் காரணமாயிற்று என்பது. "பிணையுங் கலையும் வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால், அணையு முரம்பு நிரம்பிய வத்தமு மையமெய்யே, யிணையு மளவுமில் லாவிறை யோனுறை தில்லைத்தண்பூம், பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே"(திருக்கோ - 202 = ஆதரங்கூறல்) என்ற திருக்கோவையார்க் கருத்து ஈண்டு நினைவு கூர்தற்பாலது. மென்புனல் நாட்டினை அகன்று - வன்புலக் கானடைந்து - என்று காட்டிய கருத்துமிது.
மென்புனல் நாட்டினை யகன்று - புனல் மெல்லியதாய் ஓடி வளஞ் செய்யும் நாட்டின் பகுதி. நாடு - இங்குத் தொண்டைநாட்டின் ஒரு பகுதி என்ற பொருளில் வந்தது. மென்புனல் - புனல் கடுவேகமாய் ஓடாது இடையறாது மென்மையுடன் ஊறிப் பாயும் என்றதாம்; இது பாலாறு நீர்வளஞ் செய்யுமியல்பு. நிலமேல் நீர்ஓட்டமில்லாது மேல் மணற்பரப்பு நிலத்தின்கீழ் ஊற்றம் ஓடித் தோண்டு கால்களின் வழி இடையறாது ஊற்றமிக்கு வளஞ் செய்யும் தன்மை. இதுபற்றி முன் (1099) உரைத்தவை ஈண்டு நினைவு கூர்தற்பாலன. தொண்டை நாடு குறிஞ்சி முதலிய ஐவகைத்