|
| வகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரு, நெறிவழி நின்ற வேட நீடிய தவத்தினாரும்" (3101) பிள்ளையாரது திருமண எழுச்சியினுடன் கூடிச் சென்று திருப்பெருமணத்திற் பெருகிய சிவச் சோதியுட் கலந்தனர் (3150) என்பதறியப்படும். இதுவும் கயிலைச் சார்பாதலின் அவரெல்லாம் குழுமிக் காணவுள்ளார் என்பதும் குறிப்பு. |
| 1014 |
2913 | இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி யப்பா லெண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும் நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும் நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி அறைகழ்ல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றா லற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச் சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலுஞ் சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்; | |
| 1015 |
2914 | மாதவர்க னெருங்குகுழாம் பரந்து செல்ல மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின் றாகப் பூதிநிறை கடலணைவ தென்னச் சண்பைப் புரவலனா ரெழுந்தருளும் பொழுது சின்னத் தீதிலொலி பலமுறையும் பொங்கி யெங்குந் "திருஞான சம்பந்தன் வந்தா" னென்னும் நாதநிறை செவியனவாய் மாக்க ளெல்லாம் நலமருவு நினைவொன்றார் மருங்கு நண்ண; | |
| 1016 |
2915 | கானவர்தங் குலமுலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய மானவரிச் சிலைவேட்டை யாடுங் கானும், வானமறை நிலைபெரிய மரமுந் தூறும், ஏனையிமை யோர்தாமு மிறைஞ்சி யேத்தி யெய்தவரும் பெருமையவா மெண்ணி வாத தானமுமற் றவைகடந்து திருக்கா ளத்தி சாரவெழுந் தருளினார் சண்பை வேந்தர். | |
| 1017 |
| 2913. (இ-ள்) இறைவர்...அப்பால் - இறைவரது திருக்காரிகரையினை வணங்கி மேற்சென்று; எண்ணில் பெரு.....நிகழ்பவாகி - அளவற்ற பெரிய மலைகளில் இருபக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசைகளாகிய மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளைப் பக்கங்களில் சிதறி நிரம்ப நிகழ்வனவாகி; அறைகழல்...சிலை நிலத்தில் - சத்திக்கின்ற கழலையணிந்த தேவ அரசனாகிய இந்திரனது வச்சிரப் படை தாக்குதலினால் அறுபட்ட சிறகுகளைப் பெற்று அவன்மேலே போருக்கு எழுதற்காகச் சிறகுகளை அடித்துப் பறக்க முயன்று உயர்ந்தனபோலும் காட்சி தரும் மலை சூழ்ந்த நாட்டின் பகுதியிலே; எழுந்தருளிச் செல்லா நின்றார் - எழுந்தருளிச் செல்கின்றாராகி; |
| 1015 |