1294திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

தது சிவனாமமாகிய திருவைந்தெழுத்து; "உள்ளுறையஞ் செழுத்தாக"(954); அது போல ஈண்டு விளைத்தது பிள்ளையாரது நாம மந்திரமே என்பதும் கருதுக.

1016

2915. (வி-ரை) கானவர்தம் குலமுலகு போற்ற - "கானவர் குலம் விளங்க" (662); "வேடன்" என்று பிள்ளையார் திருவாக்கினாற் பதிகத்துள்ளும், "வேடனார்" என்று திருவாசகத்துள்ளும், பிறாண்டும் பெரியோர் போற்றும் பெருமை காண்க. உலகு - உயர்ந்தோர்.
திருப்பாதச் செருப்பு - "செருப்புற்ற சீரடி" (தோணோ - 3) என்று திருவாசகத்திற் போற்றும் அருமைப்பாடு தோன்றக் கூறியபடி.
மான வரிச்சிலை வேட்டை - மானம் - பெருமை; வரி - வரிந்து நரம்பு முதலியன கட்டிய; சிலை - வில். இதுபற்றி முன் "தேனலர் கொன்றை யார்தந் திருச் சிலை" (681) என்று கூறிய கருத்துக்கள் இங்கு நினைவு கூர்தற்பாலன. சிலை வேட்டையாடும் கான் - கண்ணப்ப நாயனார் புராணம் 717 - 740 - 791 - 792 - 810 முதலியவை பார்க்க.
வான மறை நிலைபெரிய மரமும் தூறும் - "பெரிய தேக்கி னப்புறம் சென்றாற் றோன்றும் குன்று" (743); "நெருப்குபைந் தருக்குலங்க ணீடுகாடு" (722). மரமும் - மரமடர்ந்த இடங்களும்; தூறும் - தூறுகளுள்ள இடங்களும்.
இமையோர்....பெருமையவாம் எண்ணிலாத தானம் - இவை தேவர்களும் வந்து போற்றும் சிவத்தானங்களும், முனிவர் - ஞானிகளின் ஆச்சிரமங்களுமாம்; 1088 - 1090-ம் பிறவும் பார்க்க. ஏனை தானமும் - என்று கூட்டுக. சார - அருகாக.
வான் மறைய - என்பதும் பாடம்.

1017

2916
"ம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்
  தமுதுண்ட பிள்ளையா ரணைந்தா"ரென்று
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
  சேர்ந்ததிருத் தொண்டர்குழா மடைய வீண்டிப்
பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
  பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவாரப் பதியிலுள்ளோ
  ருடன்விரும்பி யெதிர்கொள்ள வுழைச்சென் றுற்றார்.

1018

(இ-ள்) அம்பொன்மலைக் கொடி....என்று - அழகிய பொன்மலையரசன் மகளாராகிய கொடி போன்ற உமையம்மையாரது திருமுலைப்பாலில் குழைத்த ஞான அமுதத் தினை உண்டருளிய பிள்ளையார் வந்தணைகின்றார் என்று எண்ணி; செம்பொன்மலை...ஈண்டி - செம்பொன் மலையாகிய மேருமலையினை வில்லாகவுடைய இறைவரது திருக்காளத்தியிற் சேர்ந்த திருத்தொண்டர் கூட்டம் நெருங்க அடைந்து; பம்பு சடை...உடன் விரும்பி - நெருங்கிய சடையினையுடைய திருமுனிவர்களும், கபால மேந்தும் காபாலியராகிய சைவர்களும், மற்றும் இவ்வாறு மாவிரதம் முதலிய பலபல வேடங்களையுடைய சைவர்களும், வேடர் குலத்தவர்களும், மற்றும் மேலாகிய தவம் புரிவோர்களும் அந்தப் பதியில் உள்ளவர்களுடன் கூடி மகிழ்ந்து; எதிர்கொள்ள உழைச் சென்றுற்றார் - எதிர்கொள்ளப் பக்கத்தில் சென்று சேர்ந்தனர்.