[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1295

(வி-ரை) பொன்மலைக் கொடி - பார்வதியம்மையார். பொன்மலை - இமயமலை அரசன்; கொடி - கொடிபோன்ற பெண்; அரசனது மகள். பொன்மலை - ஈண்டு இமயமலை. "பொன்மலைப் புலிவென் றோங்க" (552) என்றது காண்க.
"அம்பொன்மலை....அணைந்தார்" என்று - அணைந்தனர் என்று உட்கொண்டு; என்று எதிர்கொள்ள வுற்றார் - என்க; பிள்ளையார் அணைந்த பெருமைக்கேற்ப எதிர்கொள்ளு முறைமையில் உற்றனர்.
திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் கூட்டம் - திருமுனிவர் - கபாலக்கையர் - சைவர் - குலவேடர் - தவம்புரிவோர் - இவர்கள் திருக்காளத்தியில் தவநெறி சார்ந்த பல சார்விலுமுள்ள சைவப் பகுதியினரும் பிறரும். அப்பதியிலுள்ளோர் - தொண்டர் கூட்டத்துச் சேராத நகர மாந்தர். குலவேடர் - வேடர் குலத்தவர்; கண்ணப்ப நாயனாரின் மரபு உடையவர்கள் அத்தொடர்புபற்றி அங்கு வந்து சேர்ந்தோர்.
குல வேடர் - வேடர் குலத்தோர்; இவ்வாறன்றிக் குலமரபு பற்றியே சைவ வேடங்களைத் தாங்கியவர்கள் என்றலுமாம்; இது மகர குண்டலம் முதலியவை ஆதி சைவருட் டீக்கையுடையோர்க் காகுதல்போல வருவன என்றலுமாம்.
உம்பர் தவம் புரிவார் - உம்பர் - மேலாகிய; மேலாகிய தவமாவது சிவபூசை முதலாகிய சைவத் தவம். உம்பர் - மேன்மையான; உம்பர் - தேவர்கள் என்று கொண்டு, தேவர்களாவர் இங்கு வந்து மனிதர்களாய்த் தவம் புரிவோர் என்றுரைத்தலுமாம். "இ மையவ ரரம்பையர் பிறந்து, மாறில் வேடரு மாதரு மாகவே வணங்கும்" (1090) என்றது காண்க.
தொண்டர் குழாம், ஈண்டி, முனிவர் முதலியோருடன் விரும்பி - என்று கூட்டுக.
உழைச் சென்று - மலையடியின் புறத்துப் பிள்ளையார் வரும் இடத்தின் பக்கத்திற் போய்.

1018

2917
திசையனைத்து நீற்றினொளி தழைப்ப மண்மேற்
  சிவலோக மணைந்ததெனச் சென்ற போது
மிசைவிளங்கு மணிமுத்தின் சிவிகை நின்றும்
  வேதபா ரகரிழிந்து வணங்கி மிக்க
அசைவில்பெருந் தொண்டர்குழாந் தொழுது போற்றி
  "அர"வெனுமோ சையினண்ட நிறைப்ப வன்பால்
இசைவிளங்குந் தமிழ்விரகர் "திருக்கா ளத்தித்
  திருமலையிம் மலைகளில்யா" தென்று கேட்டார்.

1019

(இ-ள்) திசையனைத்தும்...போது - எல்லாத் திசைகளிலும் திருநீற்றினொளி பரவ இவ்வுலகிலே சிவலோகம் அணைந்ததென்று சொல்லும்படி சென்றபொழுது; மிசை விளங்கும்....வணங்கி - மேலே விளங்குகின்ற அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி வேதபாரகராகிய பிள்ளையார் வணங்கி; மிக்க...நிறைப்ப - (எதிர் கொண்ட) மிகுந்த அசைவில்லாத பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது துதித்து "அர! அர !" என்ற பேரொலியினால் அண்ட முழுதும் நிறையச் செய்ய; அன்பால்...கேட்டார் - புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் விரகராகிய அப்பிள்ளையார்