|
| அவர்களை நோக்கித் "திருக்காளத்தித் திருமலை இங்குத் தோன்றும் மலைகளுள்ளே யாது?" என்று அன்பினால் வினாவியருளினர். |
| (வி-ரை) தழைப்ப - தழைத்ததனால்; தழைப்பச் சிவலோக மணைந்ததென என்க. சிவலோகமெனக் காண்பதற்குக் காரணங் காட்டியவாறு; திருநீற்றுத் தொண்டர் குழாம் பல வேடச் சைவருடன் கூடிச்சென்று நிலை மண்மேற் சிவலோகம் அணைந்ததுபோன்ற காட்சியளித்தது. மண்மேல் - நிலவுலகத்தில். தத்துவங் கடந்த நிலையில் உள்ள சிவலோகம் த்துவங்களுள் அடியில் நின்ற மண்ணின் மேலே என்றபடி. |
| மிசை விளங்கும் - சிவிகை - என்க; அத் திருக்கூட்டத்தின் மேல் நெிலத்தில் விளங்குகின்ற சிவிகை. |
| வேதபாரக ரிழிந்து - பாரகர் - வேதங்களின் கரையை அடைந்தவர். பாரம் - கரை; பாரகர் - அதனை அடைந்தவர். |
| அசைவில் - அசைதல் - தொண்டு நெறியினின்றும் பிறழ்தல்; அஞ்சுதல். |
| ஓசையின் அண்ட நிறைத்தலாவது - ஓசை அண்டமெங்கும் பரவச் செய்தல். ஒருபுறம் எழுந்த ஓசையானது ஒலியலைகளின் மூலம் வானிற் பரவி உலகெங்கும் கேட்கத்தக்க நிலையையுடையதாகின்ற தென்பது இப்போது பரந்து நிலவி வழங்கும் "வானொலி" (wireless - radio) யமைப்பினால் நன்குணரக்கிடக்கின்ற உண்மை. அண்டங்களில் அரனெறி பயிலாதாகும் கேட்க நிறைத்தலான் ஒலி என்னாது ஓசை என்றார். அரனெறி வாராத மாக்கள் அரவொலியினை வெற்று ஓசை என்ற நிலையிலே உணர்குவாராதல் குறிப்பு. பல ஒலிகள் செறிதலின் பொருள் மயங்க ஓசைத்தன்மை யாய தென்பதுமாம். |
| இசை விளங்கும் - இசை - புகழ்; இசை - பண்ணிசை என்று கொண்டு இசை யாவும் தமது வாக்கில் விளங்கவுள்ள என்றலுமாம். |
| தமிழ் விரகர் - வேதபாரகர்; தமிழ்விரகர் இழிந்து, தொண்டர் குழாம் நிறைப்பக் கேட்டார் என்று முடிக்க. இத்திருமலைகளில் திருக்காளத்தி மலை யாது - என்க. |
| இத்திருமலைகளில் - இங்கே எதிரில் தொடர்ச்சியாகத் தோன்றும் பல சிகரங்களையுடைய பல மலைகளுள்ளே. இத்திருமலை - இகரமாகிய அணிமைச்சுட்டு அவர் திருக்காளத்தியினருகில் அணைந்து நின்றனர் என்பதுணர்த்திற்று. மேல் "தோன்றும் இந்தமலை"(2918) என்பது காண்க. இவ்வாறே முன்னர் மதுரை தோன்றுதலும் பிள்ளையார் "திருவால வாய்மற் றெம்மருங்கின" தென வினவியருளியதும் (2559) நினைவுகூர்க. |
| வேதபாலகர் - என்று பாடங் கொள்வாருமுண்டு. |
| 1019 |
2918 | வந்தணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து, "மறைவாழ்வே! சைவசிகா மணியே! தோன்றும் இந்தமலை காளனோ டத்தி தம்மி லிகலிவழி பாடுசெய விறைவர் மேவும் அந்தமில்சீர்க் காளத்தி மலையா" மென்ன, வவனிமேற் பணிந்தெழுந்தஞ் சலிமேற் கொண்டு, சிந்தைகளி மகிழ்ச்சிவரத் திருவி ராகம் "வானவர்க டானவ"ரென் றெடுத்துச் செல்வார், | |
| 1020 |