[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1301

கத்தை யின்றியமையாது உடன்கொண்டு முற்றுப்பெறற்பால தென்பதாம். பிள்ளையாரது திருமயிலைத் திருப்பதிகத்துள் இவ்வுண்மை விளக்கப்படும்; கண்டுகொள்க. இது சிவஞான போதப் பன்னிரண்டாஞ் சூத்திரத்தின் விளக்கிய உண்மையுமாம்.
கும்பிட்ட பயன் பாண்பார்போல் - நூல்களுக்குப் பயன் பாண்பதுபோல இறைநூல்களாற் பெறப்படும் பேறாகிய இறைவரைப் பெறுதல் என்பதற்குக் கண்ணப்பரின் வணக்கமாகிய ஒருபயன் கண்டார். இறைவரை யடையும் வீடுபேற்றுக்குச் சாதனமாகியவை சரியை முதலிய நான்குமாம். இனி இவற்றாற் பெறப்பட்ட இறைவரைப் பெறுதல்தானும் தானே சாத்தியமாய் முடிதலன்றி ஒரு சாதனமாயமைந்து அடியவர்பாற் கூட்டுவிக்கும் என்பதுமோ ருண்மையாதல் பெறவைத்தத நயம் காண்க. "சீரடியார், குலம்பணி கொள்ள வெனைக்கொடுத் தோன்"(திருக்கோவை) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க. இது பயனுக்குப் பயன் கூறியவாறென்க. போல் - உவம உருபு அதுவேயாம் என்ற பொருளில் வந்தது. "விளைத்தவன் புமிழ்வார் போல" (772); "பாசப் பழிமுதல் பறிப்பார் போல"(460) என்பது முதலியவையும், ஆண்டு உரைத்தவையும் பார்க்க. பயன் பற்றித் தோன்றிச் சிறப்பு நிலைக்களமாகிய உவமமென்பர்; காணுதல் - ஈண்டனுபவிக்கப்பெறுதல் என்னும் பொருள் தந்து நின்றது. இக்கருத்து மிக அரிதாய்ச் சிந்தித்து அனுபவிக்கத் தக்கதொன்று.
மெய்வேடர் பெருமான் - மெய் - மெய்யே உருவாகிய. மெய் - சத்து - இறைவரது தன்மை; அதுவே அன்புருவம். அன்பே சிவமாம் என்பர் திருமூலர். இக்கருத்தினையே மேல்வரும்பாட்டில் விரித்தருளுதல் காண்க.
வீழ்ந்தார் - வேறு ஒருவரால் உந்தப்பட்டுத் தம்வயமிழந்து வீழ்தல்போல என்பது குறிப்பு. "தம்பெருகு மனக்காதல் தள்ளநில மிசைவீழ்ந்தார்"(2892) என்று முன் இதன் நிலையினை விரித்தது காண்க.
தடஞ்சிலைச் சோபான நிலை தன்னாலேறி - என்பதும் பாடம்.

1022

2921
உள்ளத்திற் றெளிகின்ற வன்பின் மெய்ம்மை
  யுருவினையு மவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
  விமலரையு முடன்கண்ட விருப்பம் பொங்கிப்
பள்ளத்தி லிழிபுனல்போற் பரந்து செல்லப்
  பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானவா ரமுத முண்டார்
  மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்;

1023

2922
பங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று
  பரவுமிசைத் திருப்பதிகம் பாடி நின்று
தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்
  தம்பெருமான் கழல்போற்றுந் தன்மை நீட
அங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற
  வரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்
பொங்குதிரத தொண்டர்மடங் காட்ட வங்குப்
  புக்கருளி யினிதமர்ந்தார் புகலி வேந்தர்.

1024