|
| பின்னரும் வணங்கியநிலை முடிவுபெறாமையின் வணங்குகின்றாராகி என எச்சப் பொருள்பட வைத்தும், "போற்றும் தன்மை நீட", "அரிதிற் புறம்போந்து" என்றும் தொடர்ந்து கூறி, அவை மேற்பாட்டுடன் முடிக்க வைத்தருளினார். |
| வணங்கி நின்றார் - என்ற பாடமுமுண்டு. |
| 1023 |
| 2922. (வி-ரை.) பரவும் இசைத் திருப்பதிகம் - இப்பதிகம் கிடைத்திலது! |
| தங்கு..நீட - தங்கும் பெரும் - முன்னமே உண்ணிறைந்த பெரிய; "உண்ணிறைந் தெழுந்ததேனும்" (758); களிகாதல் - களிப்பும் காதலும்; தகைந்து - வலிந்து; தட்ப - தடுப்ப என்றது தட்ப என நின்றது. தடுத்தல் - நெடுநேரமாகியும் அவ்விடம் விட்டுப் பெயராதபடி நிறுத்துதல்; "நெடுதுபோ துயிர்த்து நின்று" "இவர்தமைப் பிரிய வொண்ணாது" (761) என்ற நிலைகள் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. |
| அரிதிற் புறம்போந்து - நீங்கமாட்டாத நிலையில் நீங்கிப் புறத்துப் போய்; புறம் - திருக்கோயிலின புறம். |
| திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சி - திருமலையைத் தாழ்ந்தெழுந்து தொழுது கொண்டே ஏறி (2920)னாராதலின் அவ்வாறே இறங்கி அடிவாரத்தில் இறைஞ்சினார் என்க. முன்போலவே இங்கும் திருமலை என்றதும் குறிக்க. |
| மடம் காட்ட - இத்திருமடம் மலையின்கீழே அடிவாரத்தில் உள்ள பழய திருமடங்களுள்ஒன்றாதல் வேண்டும்; இன்னதென்று வழக்கிலேனும் இப்போது அறியப்பெறவில்லை! |
| அமர்தல் - விரும்பியிருத்தல் என்ற குறிப்புடன் நின்றது; "அமரரா லமரப்படுவானை" (நம்பி- அதிகை). |
| 1024 |
2923 | யாவர்களு மறிவரிய விறைவன் றன்னை யேழுலகு முடையானை யெண்ணி லாத தேவர்கடம் பெருமானைத் திருக்கா ளத்தி மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப் பூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும் புரவலனார் காலங்க டோறும் புக்குப் பாமலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து பண்பினிய திருப்பதியிற் பயிலு நாளில்; | |
| 1025 |
2924 | அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலு மருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத் திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ் சென்றுதமி ழிசைபாடுஞ் செய்கை போல மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கே தாரந் தொழுதுதிருப் பதிகவிசை திருந்தப் பாடி, | |
| 1026 |