|
2925 | கூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக் குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி ஏற்றின்மிசை வருவாரிந் திரன்ற னீல பருப்பதமும் பாடிமற் றிறைவர் தானம் போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப் புகுலியர்தம் பெருந்தகையார் புனித மாகும் நீற்றினணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிதுமகிழ்ந் தப்பதியி னிலவு கின்றார்; | |
| 1027 |
2926 | தென்றிசையிற் கயிலையெனுந் திருக்கா ளத்தி போற்றியினி தமர்கின்றார் திரைசூழ் வேலை ஒன்றுதிரு வொற்றியூ ருறைவார் தம்மை யிறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி யங்கண் இன்றமிழின் விரகரருள் பெற்று மீள்வா "ரெந்தையா ரிணையடியென் மனத்த" வென்று பொன்றரளங் கொழித்திழிபொன் முகலி கூடப் புனைந்ததிருப் பதிகவிசை போற்றிப் போந்தார். | |
| 1028 |
| 2923. (இ-ள்.) யாவர்களும்...இறைவன்றன்னை - யாவராலு மறிதற்கரியவராகிய இறைவரை; ஏழுலகும் உடையானை - ஏழுலகங்களையும் தமது உடைமைப் பொருளாக வுடையவரை; எண்ணிலாத..பெருமானை - அளவில்லாத தேவர்களது தலைவரை; திருக்காளத்தி....தேனை - திருக்காளத்தி மலையின்மேல் வீற்றிருந்தருளும் செம்மையாகிய தேனாகி உள்ளவரை; பூவலரும்.....ஆர்ந்து - பூக்கள் மலர்தற்கிடமாகிய சோலைகள் பக்கத்திற் சூழ்ந்த சீகாழியின் தலைவராகிய பிள்ளையார் உரிய காலங்கள் தோறும் சென்று திருக்கோயிலினுள்ளே புகுந்து பதிகப் பாட்டுக்களாகிய மலர்களினாலே திருவடிகளை அருச்சனை புரிந்து துதித்துப் பருகி நிறைவாக அனுபவித்து; பண்பினிய....நாளில் - செம்மையாகிய பண்புகளா லினிமைதருகின்ற அத் திருப்பதியிலே பயிள்று வீற்றிருந்தருளும் நாள்களிலே, |
| 1025 |
| 2924. (இ-ள்.) அங்கண்....நிகழாதாக - அவ்விடத்து வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு அங்கு நிகழாமையினாலே; திங்கள்புனை.....போல - சந்திரனைச் சூடிய முடியினையுடைய இறைவரது ஏனை எல்லாப் பதிகள் தோறும் சென்று சென்று திருப்பதிகத் தமிழிசை பாடும் செயல்போல; மங்கையுடன்....வணங்கிப் பாடி - தேவர்கள் வணங்கித் துதிக்கும்படி வீற்றிருந்தருளும் இறைவரது வடகயிலைத் திருமலையினை இங்கு நின்றபடியே வணங்கித் திருப்பதிகம் பாடியருளி; செங்கமல மலர்....திருந்தப் பாடி - செந்தாமரைப் பூக்கள் மலர்தற்கிடமாகிய பொய்கைகளையுடைய திருக்கேதாரத்தினையும் தொழுது திருப்பதிகத்தை இசையுடன் திகழும்படி பாடி; |
| 1026 |
| 2925. (இ-ள்.) கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோகரணம் பாடி . கூற்றுவனை உதைத்தருளிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக் கோகரணத்தினையும் பாடியருளி; ஏற்றின்.....பருப்பதமும் பாடி - இடபத்தின்மேல் எழுந்தருளி வரும் இறைவரது திருஇந்திரநீல பருப்பதத்தினையும் பாடி; மற்று.....பிறவும் பாடி - மற்றும் இறைவரது திருத்தானங்களையும் போற்றிய திருப்பதிகங்கள் பிறவற்றையும் பாடியருளி; புகலியர்தம்...நிலவுகின்றார் |