1310திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

கயிலைமலை என்று கூட்டுக. மூதார் - மூத்தோர் - முனிவர். உடனாய் - உடனமர்ந்து; ஒரு கணத்திலே - ஒரு செயலாலே; அறம் நான்கு - அற முதலிய நான்கும்;- (8) பகழியால் - சிலைமேல் - எரி தொடுத்தார் - என்று கூட்டுக. எரி - தீக்கடவுளை நுனியாக உடைய அம்பு; ஆகுபெயர். இடிய - நொறுங்க; இப்பாட்டு இறைவரது வீரங்களைக் குறித்தது;- (9) இருவர் - அயனு மாலும்;- (10) விருது - வீண்மொழி - ஆரவாரம்; பொருது - வாதித்து;- (11) போரார் - அலைகளால் அலைப்புண்பதனைப் போர் என்றுபசரித்தார். இந்நாட்காணும் மூண்ட கடற்போரினையும் குறிப்பாலுணர்த்தி நின்றது. "கடன்மீதிலே யாணை செலவே நினைவர்" என்பர் தாயுமானார்; மேகங் குடிகொள் சாரல் - நீர்த்தலை யிமயச் சாரலாதலின் சாரல்களில் எப்போதும் மேகங்கள் நிறைந்துள்ளன என்பது; தேரா துரைத்த - நேரே சென்று காணாது இருந்த நிலையே உரைத்த என்றது குறிப்பு. இனித் தேரா - துரைத்த செஞ்சொன்மாலை எனக் கூட்டித், தேரா - தேர்ந்து; துரைத்த - உயர்வுடையதாகச் செய்த என்றுரைப்பதுமாம்; துரை - உயர்வு; "என்னுடைய, துறைமாண்ட வாபாடி" (திருவா) ஆயின் இது வலிந்து பொருள்கோடலாம்.
II திருக்கயிலாயம் (திருநொடித்தான்மலை)
திருச்சிற்றம்பலம்

திருவிராகம்

பண் - சாதாரி - 3-ம் திருமுறை

வாளவரி கோளபுலி கீளதூரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோளகளி றாளிவரவிற்
றோளமரர் நாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர்பொற்
காளமுகின் மூளுமிருள் கீளவிரி தாளகயி லாயமலையே.

(1)

அந்தண்வரை வந்தபுன றந்ததிரை சந்தனமொடு டுந்தியகிலுங்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழி சைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- ஆளுமவர், அற்றவர்க ணற்றுணைவன், எங்களிறை என்பனமுதலாகபபேசப்படும் இறைவரது இடம் கயிலாயமலையே.
பதிகக் பாட்டுக் குறிப்பு:- (1) வாளவரி கோளபுலி - வாள்போன்ற வரிகளையுடைய பற்றிக்கொள்ளும் தன்மையுடைய புலி; புல்லி என்பது புலி என்றாயிற்று. புல்லுதல் - பற்றுதல். உரிதாள் - உரித்த தோல்; வேள - விரும்பிய; நகர் - கயிலாய மலையே எனக் கூட்டுக; காளமுகில் மூளுமிருள் - "காரார் மேகங் குடிகொள்" (முன் பதிகம் 11); இருள் கீள - இருள் போகும்படி; விரிதாள - விரியும் ஒளியுடைய அடிகொண்ட;- (2) அற்றவர்கள் - பற்றற்றவர்கள்; கற்றவர்கள் - அனுபூதிமான்கள்;- (3) சங்கை - மயக்கம்; சங்கை - தொகுதி என்றலுமாம்;- (4) பிடியது ஒருமழு - பிடித்துப் பற்றியது ஒரு மழு;- (5) எரி அங்கையில் மூண்டு எழ; நடம் - கூத்து; தரும் - ஆடும்; இடம் - மலையே என்க;- (8) களிறின் பொருப்புடை - களிறுகள் நிறைந்த மலையின். ஒருத்தி - உமையம்மை. வெருக்குற வெருட்டலும் - அஞ்சுவித்து அசைக்க. தருக்கு இற - செருக்கு ஒழிய;- (9) புனல் - கங்கை; பரிசை - பரிசு. தன்மை; புரிவினவர் - அருளுடையவர். புரிவு தரும் - அறிய வரும்; கரியவன் - மால்; மறை புரியவன் - அயன்;- (10) வண்டர் -