|
| | பூழ்தி - புழுதி பட; கிளைக்க - தோண்ட. பன்றிகள் இரையாகிய கிழங்கு முதலியவற்றை தேடி நிலைத்தைக் கிளைத்தல் புலத்தைப் புழுதிபட உழவர் உழுதல் போன்றது என்க;- (6) நீறு...சேரும் - விரதிகளின் செயல்கள் நிலத்துண்ணல், தியானத்துடன் மலையில் சேர்தல் முதலாயின;- (7) அடக்கி - நின்றார் - என்று கூட்டுக; அடக்கி - ஓதி என்று கூட்டினுமாம்; உடைந்த.....சினமாமுகம் செய்யும் - உடைந்த - விரிந்து வீசும் - காற்றினால் வேங்கைமரங்கள் அசைய அவற்றின் பூக்கள் கல்லறைகளின் மேல் விழுந்து கிடப்பதை வேறு புலி எனக் கருதி வேங்கை சினமுகஞ் செய்யும் (புறநானூறு பார்க்க); கல்லறை - முழைகளும் கல் முற்றங்களும்;- (8) கிரமமாக - இசை ஒழுங்குபட; வேதம் ஓதும் கிரமம்போல என்றலுமாம். பதம் - கிரமம் - சடை - முதலியன வேதம் ஓதும் முறை மரபுப் பெயர்கள்;- (9) நின்றார் - சிவபெருமான்; அலமந்தவர் - அயனரி யிருவர்; அவர் தாழ்ந்து தந்தம் முடி சாய வணங்க; யானை மண்டையைப் பீறிச் சிங்கம் குருதியுண்ண, அவ்யானைக் கோட்டினின்று முத்துதிர்வன; முத்துப் பிறக்குமிடங்களுள் யானைக்கோடும் ஒன்று; "பருக்கை யானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புகந், நெருக்கி வாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பன்" (பிள் - நட்டரா - திருவாரூர் - 1) என்று இக்கருத்தைப்பற்றியே முன் அருளியது காண்க. கீழ்ந்து - பீறி - போழ்ந்து; பிளந்து;- (10) மீன்கவர்வார் - புத்தர்; மாசுடம்பினர் - அமணர்; "கழுவா வுடலம்" (நம்பியாண்டார்); அடுக்க நின்ற அறவுரைகள் - அடுத்தல் - பொருந்துதல்; அமணர்களது அறவுரை அடாதன; அவ்வாறன்றி அடுப்பனவாகிய அறவுரை; இவை வேத விதிமானவை. ஆங்குக் கேட்டவர் - என்பது சனகாதியர்களையும் குறிப்பாலுணர்த்தி நின்றது; அவர்களுக்கு ஞானோபதேசம் புரிந்த இடம் - கயிலைச்சாரல் என்பதும் கருதுக. நின்ற - மோனநிலை நின்ற;- (11) நீர்க்கோட்டு - பனி மலியும் உச்சியினை உடைய; ஆய்ந்து சொன்ன - நேரில் கண்ணாற் காணாது மனத்தாற்கண்டு பாடிய சரிதம்பற்றிய அகச்சான்று,. |
| | தலவிசேடம் :- திருக்கேதாரம் - வடநாட்டுத் தலங்களுள் நான்காவது தலம். பிருங்கி முனிவர் தம்மை வழிபட எண்ணியபோது அவருக்காக அம்மையார் சிவபொருமானை நோக்கி விரதங் கிடந்து பூசித்து இடப்பாகம் பெற்ற பதி; அம்மை வரங்கிடந்த கேதாரகௌரி விரதம் மிகத் தேற்றமாயறியப்பட்டுப் பலராலும் இன்றும் நோற்கப்படுவதும் மிக்க பயன்றருவதுமாம்; இத்தலத்தில் ஓராண்டில் ஆறுமாதம் தேவர் பூசை; ஆறுமாதம் மனிதர் பூசை; இயக்கர் முதலிய பலவகைத் தேவச்சாதியார்களும் தேவர் முனிவர் முதலியோர்களும் தொண்டர்களும் வழிபடும் வகைகள் பிள்ளையார் பதிகத்தினுள்ளும் நம்பிகள் பதிகத்துள்ளும் விரிக்கப்படுதல் காண்க. தேவபூசை தொடங்கும் காலமாகிய ஐப்பசிப் பூரணை அணுகிய உடன் அருச்சகர் இறைவர் திருமேனியில் வெண்ணெய்க் காப்பிட்டு மலையினின்று கீழிறங்கி வந்துவிடுவர்; பின்னர் வரும் தேவபூசையாகும் ஆறுமாதங்களும் தலம் விரித்துக் கூறப்பட்டுள்ளன; ஆண்டுக் கண்டு கொள்க. பிள்ளையாரும் நம்பிகளும் இத்தலத்தைத் திருக்காளத்தியி னின்றபடியே பாடியருளினர். சுவாமி - கேதாரநாதர்; அம்மை - கேதாரகௌரியம்மை; பதிகம் 2. |
| | இங்குச் செல்லும் வழி மிகக் கடினம்; இன்னும் செவ்வனே உணரப்பட்டிலது. ஆளுடைய அரசுகள் புராணமும் பார்க்க. |
| | கௌரிகுண்டினின்றும் பீமகுண்டா - ராமபாடல முதலியவற்றின் வழி போக வேண்டுமென்பர்; அரித்துவாரத்தினின்றும் 200 நாழிகையளவில் இமயமலைச்சரிவில் |