|
| உள்ளதென்பர்; இருடிகேசம் (ரிஷிகேஷ்) நிலையத்தினின்றும் 146 நாழிகையளவிலும் அடையலாகும் என்பர். |
| 2925. (வி-ரை.) கோகரணம் பாடி - பதிகம் "கோகரணமே" என்று பதியினைப் பற்றியது என்பது குறிப்பு. |
| பருப்பதத்தின் கொள்கை - இப்பதியின் தன்மைகளையும் வழிமொழிகளையும் பற்றிய பதிகக் குறிப்புப்பெறக் கொள்கை என்றார்; நம்பிகள் பதிகமும், 1614-ல் தலவிசேடமும் (III-பக். 526) பார்க்க. |
| மற்றிருவர் தானம் போற்றிய சொன்மலர் மாலை பிறவும் பாடி - இவை இன்னவென் றறியக்கூடவில்லை; வடநாட்டில் உள்ள வாரணாசி முதலிய பதிகளையும் குடக்கில் உள்ள ஏனைப் பதிகளையும் பாடிய பதிகங்கள் போலும்; இவை கிடைத்தல! |
| நீற்றினணி கோலத்துத் தொண்டர் - "திசையனைத்து நீற்றினொளி தழைப்ப" (2917); இவர்களைப்பற்றி முன் (2916) உரைத்தவை பார்க்க. புனிதமாகும் - ஆகும் - செய்யும்; ஆக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது. |
| நெடிது - மிகவும்; நீண்டகாலம் என்றலுமாம். |
| நிலவுகின்றார் - நிலவுதல் - தங்கியிருத்தல். ஆளுடைய அரசுகளும் இம்மலையிற்றிருப்பணியாயின செய்து தங்கியருளினார் (1612) என்பதும் இங்கு நினைவுகூர்க. நிலவுகின்றாராய்ப் போற்றி - உன்னி - மீள்வார் - போந்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. நிலவுகின்றார் - முற்றெச்சம். |
| பாடி மகிழ்ந்திறைவர் தானம் - என்பதும் பாடம். |
| 1027 |
| திருக்கோகரணம் |
| திருச்சிற்றம்பலம் |
| திருவிராகம் | பண் - சாதாரி -3-ம் திருமுறை | |
| என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியயெனதுள் நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவு ணண்ணுமிடமாம் ஒன்றியம னத்தடியர் கூடியிமையோர்பரவு நீடரவமார் குன்றுகணெ ருங்கிவிரி தண்டலைமி டைந்துவளர் கோகரணமே. | |
| (1) |
| கோடலா வீனும் சாரன்மு னெருங்கிவளர் கோகரணமே ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான் நாடியத மிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள் பாடவல பத்தரவ ரெத்திசையு மாள்வர்பர லோகமெளிதே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- எனதுள் நன்றும் ஒளியான் - ஒளிசிறந்த பொன்முடிக் கடவுளாகிய சிவன் நண்ணுமிடம் கோகரணமே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) அயலவர்க்கு என்றும் அரியான் என்க. அரியான் - அறிதற்கரியவன். இயலிசை....ஒளியான் - இயலு மிசையுமாகிய தமிழின் வரும் பொருள்களாகி என்னுள்ளே நின்று நன்கு காட்டியருளும் ஞானவொளியானவன்; ஒளி...கடவுள் - பேரொளிப் பிழம்பாகிய திருமேனியுடையவர்; பேரொளியாகக் கோடிசூரியப் பிரகாசமுடையவராகத் தியானித்தல்வேண்டுமென்பது சிவாகமங்களின் விதி. "ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி" (முருகு); நீடரவமார் குன்றுக ணெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் - நாட்டுச் சிறப்பினை உள்ளபடி தன்மையணி |