[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1315 |
|
| கடற்கரையில் உள்ளது பெருஞ் சிறப்பு. அதுபற்றிக் "கடல் வட்டமும்" (9) எனப் பிள்ளையாரும், "மாகடல் சூழ்" என்று அரசுகளும் அருளியமை பதிகங்களுட் காண்க. கடல்வளமே யன்றி நாட்டு நீர்வளமும் மலைவளமும், காடடுவளமும் எனநானில வளங்களும் மயங்க உள்ளது சிறப்பு; பிள்ளையார் பதிகம் காண்க. அரசுகள் கயிலை சென்றருளிய வழியில் நடந்து கடந்தருளிய நாடுகளுள் இப்பதியினை உள்ளிடது துளுவநாடும் ஒன்றாமென்பது "பெருந லங்கிளர் நாடு மெண்ணில பிற்பட" (1616) என்றதனாற் கருத உள்ளது. இங்குச் செல்கின்றபோது இப்பதியின் திருத்தாண்டகப் பதிகத்தை "மாகட ல்சூழ் கோகரண மன்னி னானே" என்று பாடியருளினர் என்பதும் கருதப்படும். தனது இலங்கையில் தாபிக்கும் பொருட்டு இலிங்கமூர்த்தியை இராவணன் சிவபெருமானிடம் பெற்றுக் கொணர்ந்தான் என்றும், தேவர்களது வேண்டுகோளின்படி விநாயகக் கடவுள் அதனை வாங்கிக் கீழே ஊன்றவைத்தருளிவிட்டனர் என்றும், பின்னர் இராவணன் அதனைப் பெயர்த்தெடுத்துப் போக எண்ணிக், கயிலை பெயர்த்தசைத்த தனது முழு வன்மையினையும் கொண்டு எடுக்க முயன்றும் இயலாது இறைவர் உள்வளைந்து (கோ - பசு; கர்ணம் - காது) குழைந்தமையால் இப்பதிக்குக் கோகர்ணம் எனவும் இறைவருக்கு மகாபலேசுவரர் எனவும் பெயர்கள் போந்தன என்றும் தலவரலாறுகள் கேட்கப்படுவன. சுவாமியின் திருவுருவம் சிறிய அளவில் முந்திரிவிதை போன்ற திருவடிவுடையது. இங்குச் சிவாகமங்களின்படி வழிபாடுகள் நடைபெறுதலாகிய சிறப்பும் அன்பர்கள் யாவரும் நேரே இறைவரது திருமேனியைத் தீண்டி வழிபடவுள்ள சிறப்பும் அன்பர்கள் யாவரும் நேரே இறைவரது திருமேனியைத் தீண்டி வழிபடவுள்ள சிறப்பும் பிள்ளையாரது பதிகத்துப் போற்றப்பட்டன; "மாதரொடு மடவார்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கடூஉய்" (2); "ஆறுசம யங்களும் விரும்பியடி பேணியர னாகமமிக்க கூறுமனம்" (6); சுவாமி - மகாபலேசுவரர்; அம்மை - கோகரண நாயகி; கோயிலும் ஊரும் - மகாபலேசுவரம் எனப்பெறுவன; பதிகம் 2. | | இது (M.S.M.Ry.) அரக்கோணம், ரேணுகுண்டா, குண்டக்கல், கடக், ஹுபிளி சந்திப்பு (Junction)க்களின் வழியாய் லோண்டா சந்திப்புச் சேர்ந்து, அங்குநின்றும் வடக்கிற் செல்லும் புனா இருப்புப்பாதையில் வார்த்தார் என்ற நிலையத்தினின்றும் மேற்கில் கற்சாலைவழி 32 நாழிகையளவில் பல நிலைகளில் இடையீடிட்டு அடையத்தக்கது; மோட்டார்பஸ் வசதி உண்டு; கடற்கரையில் உள்ள பதி; (2) ஜோலார்பேட்டை, பௌரிங்பேட்டை, பெங்களூர், பிரூர் (Birur), ஹரிஹர் சந்திப்புக்களின் வழி ஹுப்ளி சேர்ந்து பின்னர் முன்போலவே சென்று மேற்செல்வது மற்றொரு வழி. இவ்வழியில் இருப்புப்பாதைப் பயணம் சிறிது குறைவதாம். ஹுப்ளியிலிருந்தும் மோட்டார்பஸ் மூலம் 100 மைலிலும் அடையலாம். | | திருப்பருப்பதம் | | திருச்சிற்றம்பலம் | | பண் - வியாழக்குறிஞ்சி - 1-ம் திருமுறை | | | சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. | | | (1) | | வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான் பண்செலப் பலபாட லிசைமுரல் பருப்பதத்தை | |
|
|
|
|