[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1319

III திருக்காளத்தி
திருச்சிற்றம்பலம்

பண் - கொல்லி - 3-ம் திருமுறை

சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினி லுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே.

(1)

அட்டமா சித்திக ளணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- காளத்தியினின்றும் நீங்கிச் சென்றாலும் எந்தையார் இணையடி என் மனத்துநீங்காதுள்ளன என்று துதித்து விடைபெற்றுச் சென்றது.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) சந்தம் - மணம்; ஆர் - சந்தனம். சந்தம் என்றதனை அகிலொடுங் கூட்டுக; சந்தம் - சந்தனம், ஆர் - பொருந்திய என்றுமாம். தேக்கு - இதனை "நீண்ட தேக்கி னப்புறஞ் சென்றாற் றோன்றும் குன்றினுக் கயலேயோடுங் குளிர்ந்த பொன்முகலி" (743) என்று மலையினை மறைக்கும் அளவு வளமுடையனவாகிச் செறிந்தன என்று கூறியதனை நினைவுகூர்க; சாதி - உயர்வு குறித்தது. உந்துதல் - பெருவெள்ளத்தில் அலைத்து வருதல்; உமை - ஞானப் பூங்கோதையம்மை. இம்மலை திருக்கயிலையே என்ற குறிப்புப்பெற இப்பதிகத்துள் இப்பெயராற் போற்றியருளினார். உமையொடும் எந்தையார் - "வரையென மாதினொடும் வீற்றிருந்தான்" என்று திருத்தொணியைப் போற்றியவாறு நினைந்து, (தென்) கயிலாயப் பதியாகிய இவ்விறைவரே அங்கு வந்து ஞானவமுது அளித்த எந்தையார் என்றதும் குறிப்பு. மனத்து உள்ளவே - கண்ணாற் காணும் இந்நிலையின்றும் நீங்கினும் மனத்துள் நீங்காதுள்ளன என்றது. இக்குறிப்பு இப்பதிகம் விடைகொண்டு புறப்படும்போது அருளியதென்பதற்கு அகச்சான்று;- (2) சாலமா பீலி - மயிற்பீலியின் மிகுதி; மயில் குறிஞ்சிக் கருப்பொருள்; மயில்கள் வாழுமிடங்களில் ஆயிரக்ணக்காகக் காணப்படுவன. காலம் - வெள்ள காலம்; பருவம் பொய்யாது வருதலும் குறிப்பு; உரிய காலம் என்பதுமாம். நினையுமா நினைவதே - அவரை நினைவதே நினைவு எனப்படும். - ஆறு; ஈறு குறைந்துநின்றது;- (3) வீங்கு - மேன்மேற் பெருகும்;- (10) வாங்கிடும் - போக்கும்;- (11) அட்டமா சித்திகள் அணைதரு - தலவிசேடக் குறிப்பு. சிட்டம் - நல் ஒழுக்க விதி.
தலவிசேடம்:- திருக்காளத்தி - கண்ணப்பர் புராணத்திறுதியில் உரைக்கப்பட்டது.
2927
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடு
  மறைவாழ வந்தவர்தா மலையுங் கானும்
முன்னணைந்த பதிபிறவுங் கடந்து போந்து
  முதல்வனா ருறைபதிகள் பலவும் போற்றிப்