[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1321

2928
திருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
  சென்றணைந்து பணிந்துதிருப் பதிகம் பாடி,
வருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்
  வலிதாயம் வந்தெய்தி வணங்கிப் போற்றி
உருவேற்றா ரமர்ந்துறையு மோத வேலை
  யொற்றியூர் கைதொழச்சென் றுற்ற போது
பெருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
  பெரும்பதியோ ரெதிர்கொள்ளப் பேணி வந்தார்.

1030

(இ-ள்.) திருவேற்காடு.......பாடி - திருவேற்காட்டிலே விரும்பி வீற்றிருந்தருளும் செழுஞ்சுடராகிய இறைவரது அழகிய திருக்கோயிலின்கண்ணே சென்று சேர்ந்து வணங்கித் திருப்பதிகம் பாடியருளி; வருவேற்று மனத்து அவுணர்.......போற்றி - எதிர்த்து வரும் வேறுபட்ட மனமுடைய பகைவராகிய அவுணர்களுடைய முப்புரங்களையும் எரித்த இறைவரது திருவலிதாயத்தில் வந்து சேர்ந்து வணங்கித்துதித்து; உரு ஏற்றார்...போது - உருவுடைய இடப ஏற்றினை உடைய இறைவர் விரும்பி வீற்றிருந்தருளும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரைத் தொழுவதற்குச் சென்றபோது; பெருவேட்கை...பேணி வந்தார் - மிக்க பெரிய விருப்பந் தருகின்ற வாழ்வு பெற்ற தொண்டர்களும், அந்தப் பதியிலுள்ளவர்களும் பிள்ளையாரை எதிர் கொள்ளும் பொருட்டு அன்புடனே வந்தார்கள்.
(வி-ரை.) செழுஞ்சுடர் - "சோதியே சுடரே சூழொளி விளக்கே" (திருவா) என்றபடி ஒளியுருவமாகி உள்ளே உயிரறிவை விளங்கவைக்கும் சுடர். செழுமையாவது உயிர்க்குச் செழுமைதரு மியல்பு.
வரு - வேற்று மனத்து - அவுணர் - வருதல் - தீமை பூண்டு வேத சிவாகம விதிகளுக்கு மாறுபட்டு வருதல். வேற்று மனம் - மாறுபட்டுப் பகைமைபூண்ட மனம்; அவுணர் - திரிபுராசுரர்கள்.
ஓதவேலை - ஓதம் - குளிர்ச்சியுடைய; வேலை - வேலைக்கரையில் உள்ள.
பாடி - போற்றி - சென்றுற்றபோது - வினையெச்சங்களுக்குச் செல்வர் என்ற வினைமுதல் முன் பாட்டினின்றும் வருவிக்க.
செல்வர் - பாடிப் போற்றிச் செவன்றபோது தொண்டர் - பதியோர் பேணி வந்தார் - என்று, வினையெச்சங்கள் பிறவினை முதல் வினைகொண்டு முடிந்தன.
பேணி - பேணுதலாவது அன்புபூண்டு செய்கை செய்தல். பெருவேட்கை தருவாழ்வூ பெற்ற தொண்டரும் பதியோரும் என்க. எண்ணும்மைகள் தொக்கன. வாழ்வு பெற்ற தொண்டர் - வாழ்வு பெற்ற - என்றதனை இரண்டிடத்தும் கூட்டுக. பிள்ளையாரை எதிர்கொள்ளும் வேட்கை தருதல் முன்னைத் தவத்தினால் வரும் வாழ்வு என்பது.

1030

2929
மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும்
  தொழுதிழிந்து "விடையவ"னென் றெடுத்துப் பாடி
மைக்குலவு கண்டத்தார் மகிழுங் கோயில்
  மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து