1322திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர்
  தம்பெருமான் திருவாயி லூடு சென்று
புக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு
  போற்றெடுத்துப் படியின்மேற் பொருந்த வீழ்ந்தார்.

1031

(இ-ள்.) மிக்க...பாடி - பெருகிய திருத்தொண்டர்கள் தொழுதுகொண்டு வந்தணையவே பிள்ளையார் தாமும் எதிர் தொழுது சிவிகையினின்றும் இறங்கி "விடையவன்" என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடியருளி; மைக்குலவு..தாழ்ந்து - அவ்வாறு பாடிக்கொண் டருளியபடியே விடம் விளங்கும் கழுத்தினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கோயிலின் முன் உள்ள நிலைபெற்ற திருக்கோபுரத்தின் முன்னே வந்து நிலமுற வணங்கி; தக்க...சாற்றி - தகுந்த திருக்கடைக்காப்பினையும் சொல்லியருளி; தேவர்தம் பெருமான்...வீழ்ந்தார் - தேவதேவரது கோயில் திருவாயிலின் வழியே சென்று உள்ளே புகுந்தருளி வலமாகச் சுற்றி வந்து தூயவராகிய இறைவர் திருமுன்பு துதித்து நிலம்பொருந்த வீழ்ந்து வணங்கினார்.
(வி-ரை.) தொழுது அணைய - தொழுதிழிந்து - தொழுது - தொழுதுகொண்டு; உடனிகழ்ச்சி குறித்தது; "தொழுதெழுவாள்" (குறள்) என்புழிப்போல; தொழுவதின் ஆர்வமும் விரைவும் குறித்தது.
"விடையவன்" என்று எடுத்துப் பாடி - "விடையவன்" என்பது பதிகத் தொடக்கம்; எடுத்தல் - தொடங்குதல்; இப்பதிகம் பதியின் புறத்தே தொண்டர்கள் தம்மை எதிர்கொள்ளக் கண்டபோது பிள்ளையார் அருளியது. "உறையும் இடம் ஒற்றியூரே" என்ற பதிகத்தின் மகுடமும், "உறை ஒற்றியூரைச் சொன்ன" என்ற திருக்கடைக்காப்பும் இதற்கு அகச்சான்றாகும். திருவாரூரில் தொண்டர்கள் எதிர் கொண்டபோதும் இவ்வாறே "வந்தி றைஞ்சுமெய்த் தொண்டர்தங் குழாத்தெதிர் வணங்கிச்...சண்பையர் தலைவர்", "அந்த மாயுல காதியாம் பதிகமங் கெடுத்தே", "எந்தை தானெனை யேன்று கொளுங்கொலென் றிசைத்தார்" (2405) என்றதும், பிறவும் காண்க. இரண்டு பதிகளும் இறைவர் புற்றிடங்கொண் டெழுந்தருளியுள்ளமையும், பின்னர்வரும் ஆளுடைய நம்பிகளது வரலாறுகளும் இங்கு நினைவுகொள்ளற்பாலன.
திருக்கோபுரத்து...சாற்றி - பதியின் புறத்தே எதிர்கொள்ள வந்த தொண்டர்களைத் தொழுது தொடங்கிய பதிகத்தினை அருளிக்கொண்டவாறே திருவீதி கடந்து போந்து திருக்கோபுரத்தின் முன் திருக்கடைக்காப்புச் சாற்றிப் பதிக நிறைவாக்கியருளினர், இச்சிறப்பு இத்திருப்பதிக்கும் உரியது.
புனிதர் முன்பு போற்றெடுத்து - இங்குப் பாடியருளிய "சொற்றிகழும் திருப்பதிகம்" (2930) கிடைத்திலது!
படியின்மேல் பொருந்த - நிலத்தில் திருமேனி பொருந்தும்படி. வீழ்ந்தார் - விதிப்படி அட்டாங்கமாக வணங்கினார்; "செல்வர்" என்ற எழுவாய் முன் (2927) பாட்டினின்றும் வருவிக்க.

1031

திருவொற்றியூர்
திருச்சிற்றம்பலம்

பண் - பஞ்சமம் - 3-ம் திருமுறை

விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம் பலகரந்தைச்