| சடையவன் சாமதேவன் சசி தங்கிய சங்கவெண்டோ டுடையவ னூனமில்லி யுறை யும்மிட மொற்றியூரே. | |
| (1) |
| ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை யொற்றியூரைச் சண்பையர் தந்தலைவன் தமிழ் ஞானசம் பந்தன்சொன்ன பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந் தேத்தவல்லார் விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் வீடெளிதே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- விடையவன் - சங்கவெண்டோ டுடையவன் என்பன முதலாகிய பெருமைகளா லறியப்படும் இறைவர் நீங்காது "உறையும் இடம் ஒற்றியூரே" யாகும். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) சாமவேதன் - சாமவேத விருப்புடையவர்; சசி - கடல்; சசி தங்கிய சங்கவெண்தோடு - கடற்சங்கினாலாய தோடு; "சங்கக் குழையார் செவியா" (தேவா); ஊனமில்லி - குறைபாடு எதுவுமில்லாதவர்;- (2) பாணி செய்ய - தாளமிட; பறைக் கண் - பறைபோல் அகன்ற கண்; "பறைபோய் விழிகட்போய்" (அம்மை)- (3) விளிதரும் - உருவ நாசமுடைய; அழிவுடைய;- (4) பறைத்து - அழித்து; உரவுநீர் - ஆறு;- (5) விலகினார் - வேதநெறி -சைவநெறிகளினின்றும் தவறியவர்களது; விதியா லருள்செய்து - கன்மபலனை அனுபவிக்கச் செய்தலால் தீர்த்தருளி; அலகினால் வீசி - திருவலகு பணி மாறி;- (6) கமை - பொறுமை பேர்அருள் (க்ஷமை - வடமொழி); சுமை - கற்றைச் சடை; அமை - மூங்கில்; ஒடு - போல - உவம உருபு; அம்மையாரது தோளுக்கு உலமம். இலங்க - இலங்க விளங்கும்;- (7) நன்றியால் - இறைவர் உயிர்கள்பாற் செய்யாமற் செய்த உதவிக்கு நன்றி மறவாது; வரையே சிலையா -ஆரழலம் பொன்றினால் - மும்மதிலும் எய்த பெம்மான் - பொன்றினார் வார்சுடைலைப் பொடிநீ றணிந்து - உலகுக்கொரு நன்மையாலே - உறையும்மிடம் -என்று கொண்டு கூட்டி உரைத்துக்கொள்க;- (8) பெற்றி - தோன்றும் தன்மை; சுற்றியான் - உடை யுடுத்தவன்; சுத்தி சூலம் - சுத்தியும்ம சூலமும்; சுத்தி - இப்பிவடிவாகத் தலையோட்டாலமைந்த திருநீற்றுக்கலம்; "சுத்திய பொக்கணம் - (திருக்கோவை - 292); "சுத்தி தரித்துறை யுஞ்சோதி" - (பிள். தேவா - எருக்கத்தம் புலியூர் - 10); சூலம் - கண்ணுதல் மேல் விளங்க - சூலம் நெற்றியின்மேல் உயர விளங்க; ஒற்றியான் - அழுத்தினவர்;- (9) திரு - அழகு; தெரிவு - உயிருணர்வு;- (10) ஆகம செல்வனார் - சிவாகமங்களை வகுத்தவர்; ஆகமநெறி நின்று அடையப்படும் வீட்டுச் செல்வமுடையவர். கூகையம் மாக்கள் - கூகை இரவிற் றிரிதல் போல் இருளாகிய அறியாமையிலே திளைத்தாடுகின்றவர்கள். மாக்கள் - என்ற குறிப்புமிது; ஓகை - மகிழ்ச்சி. |
| தலவிசேடம்:- திருவொற்றியூர் - III- பக்கம் 571 பார்க்க. |
2930 | பொற்றிரள்கள் போற்புரிந்த சடையார் தம்பாற் பொங்கியெழுங் காதன்மிகப் பொழிந்து விம்மிப் பற்றியெழு மயி்ப்புளக மெங்கு மாகிப் பரந்திழியுங் கண்ணருவி பாய நின்று | |