1324திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

சொற்றிகழுந் திருப்பதிகம் பாடி யேத்தித்
  தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரோடும்
ஒற்றிநகர் காதலித்தங் கினிது றைந்தா
  ருலகுய்ய உலவாத ஞான முண்டார்.

1032

(இ-ள்.) பொற்றிரள்கள்....விம்மி - பொன்னினது திரட்சிகள்போல முறுக்கிய சடையினை உடைய இறைவர்பால் பொங்கி மேல் எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலலோங்கி விம்மி; பற்றி எழும்...நின்று - திருமேனியைப் பற்றி மேல் எழுகின்ற மயிர்ப்புளகம் திருமேனியெங்கும் நிரம்பப் பரந்து வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந்த தொழுக நின்று; சொல் திகழும்..ஏத்தி - சொற்பொருள் மிக விளங்கும் திருப்பதிகத்தினைப் பாடித் துதித்து; தொழுது...ஞானம் உண்டார் - தொழுது புறத்திலே அணைந்தருளித் திருத்தொண்டர்களுடனே கூடி உலக முய்தற்பொருட்டுக் கெடுதலில்லாத சிவஞானவமுத முண்டருளிய பிள்ளையார் திருவொற்றியினை விரும்பி அங்கே இனிதாக எழுந்தருளியிருந்தனர்.
(வி-ரை.) பொற்றிரள்கள்போற் புரிந்த - பொன்னின் றிரள்கள் போலப் புரியாகிய - முறுக்கி நின்ற. புரிதல் - முறுக்குதல்; "பொன்றிரண் டன்ன புரிசடை புரள" - (பிள். தேவா - அச்சிறு பாக்).
எங்கும் ஆகி - திருமேனி முற்றும் பரவி. சொற்றிகழுந் திருப்பதிகம் - இப்பதிகம் கிடைத்திலது! இஃது இறைவர் திருமுன்பு பாடியருளியது.
ஓற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் - மேல்வரும் திருமயிலைப் பூம்பாவை பற்றிய அற்புத நிகழ்ச்சியின் பொருட்டு உண்மலர்ந்த திருவருட் குறிப்பினாலே அந்நகரின்கட் காதலும், அதனால் அங்கு இனிதுறைதலும் எழுந்தன என்க; உலகுய்ய உலவாத ஞானமுண்டார் - என்றது மிக்குறிப்பு.
உலகுய்ய உலவாத ஞானம் உண்டார் - ஞானப் பாடலினாலே அழியாமை செய்யும் திறமும் மேல் திருமயிலை நிகழ்ச்சியிற் காண்க. அத்திருப்பதிகத்தின் குறிப்புக் கூறும் வகையால் ஆகிரியர் அது "மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்" - உண்மையினைத் (உறுதிப் பொருளை) தெருட்டிச் சைவத்தாபனம் செய்யும் நிலைபற்றியது என எடுத்துக்காட்டுதலும் காண்க. உலவாத - அரவினால் உலந்த பெண் உலந்தே ஒழியாது பின்னர் உயிர்பெற்றமையும், அழியாத நிலைமை பெற்றுச் சிவத்தை மேவினமையும் காட்டும் குறிப்புடன் நின்றது.
ஞானம் பெற்றார் - என்பதும் பாடம்.

1032

வேறு

2931
இன்ன தன்மையிற் பிள்ளையா ரிருந்தன; ரிப்பாற்
பன்னு தொல்புகழ்த் திருமயி லாபுரிப் பதியின்
மன்னு சீர்ப்பெரு வணிகர்தந் தோன்றலார் திறத்து
முன்ன மெய்திய தொன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.

1033

(இ-ள்.) இன்ன.....இருந்தனர் - இவ்வாறாகிய தன்மையிலே பிள்ளையார் எழுந்தருளி யிருந்தனர்; இப்பால்...பதியின் - இவ்விடத்துப் புகழ்ந்து பேசப்பட்ட பழைமையாகிய புகழினையுடையதிருமயிலாபுரிப் பதியில்; மன்னுசீர்....திறத்து - நிலைபெற்ற சிறப்பினையுடைய பெருவணிகர் குடியில் வந்த பெருமையினையுடையவரது