[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1325

திறத்திலே; முன்னம்...மொழிவாம் - முன்னே பொருந்தியதொரு வரலாற்றினை நிகழ்ந்தபடி சொல்லப் புகுகின்றோம்.
(வி-ரை.) இன்ன....இருந்தனர் - இதுவரை பிள்ளையார்பாலினமைந்து கூறிவந்த வரலாற்றினை முடித்துக் காட்டியபடி.
இப்பால் இனி, இங்குநின்றும் சரிதங் கேட்போது நினைவினைத் திருமயிலை வரலாறு தொடங்கும் வகையால் அங்குச் செலுத்தி உடன்கொண்டு போவார் ஆசிரியர் இப்பால் என்று பிரித்துக் கூறி எடுத்துக்கொண்டார்; அதுவுந் தொண்டைநாட்டினைப் பற்றியதாதலானும், படிப்போரது நினைவு இங்குஅகலாது செல்வதாலும் "இப்பால்" என அணிமைச் சுட்டினாற் கூறினார். "இந்நிலை யிவனிங் கெய்தி யிருந்த னிப்பானீடும்" (1754); "இவ்வகை யிவர்க ளங்க ணிருந்தன ராக விப்பால்" (2497) என்பன முதலியவை காண்க.
பன்னு தொல்புகழ் - அம்மை மயிலுருவுடன் பூசித்த பழஞ் சரிதப் புகழும், அன்ன பிறவும் ஆகும்.
பெரு வணிகர்தம் தோன்றலார் - வணிகர்மரபிற் பெரும்பிரிவு மூன்றனுள் பெருவணிகர் என்னும் மரபில் வந்தவர்; "குடிமுதல் வணிகர்" (405); "பெருவணிகர் குடிதுவன்றி" (1717) என்றவையும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. (மி -498; மிமிமி-பக். 282). பெரிய வாணிகத்துறை நின்றவர் எனப் பொதுவகையா லுரைப்பாரு முண்டு. தோன்றலார் - அம் மரபில் வந்தவர்; தோன்றியவர்.
வணிகர்தந் தோன்றலார் திறத்து முன்னம் எய்தியது - வணிகரது அன்பின் திறமே பின் விளையும் வரலாற்று நிகழ்ச்சிக்குக் காரணமாயின மையின் இவ்வாறு கூறினார்; முன்னம் - பிள்ளையார் திருவொற்றியூர் சார்வதன் முன்.
ஒன்று - ஒரு வரலாறு; பிள்ளையார் சார்பினாலே முன்னம் பல இடங்களிலும் பலப்பல வரலாறு நிகழ்ந்தனவாக இங்கு மயிலையில் வணிகர் திறத்து நிகழ்ந்த ஒன்று.
நிகழ்ந்தவா - ஆறு என்பது ஈறுசெட்டு ஆ என நின்றது. நிகழ்ந்த ஆறே - படியாத - என்க.
மொழிவாம் - இனிச் சொல்லத் தொடங்கும் வரலாற்றின் பெருமையுட் கேட்போர் மனம் பதிய இவ்வாறு கூறுதல் ஆசிரியர் மரபு. "மொழிவே னுய்ந்தேன்" (173); "நிகழ்ந்ததனை மொழிகின்றேன்" (1952) முதலியவை காண்க.

திறத்து - சார்பு பற்றியதாக என்றலுமாம்.
சீர்ப்புகழ் வணிகர் - என்பதும் பாடம்.

1033

2932
அருநி தித்திறம் பெருக்குதற் கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப் பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தி னெல்லையில் வளத்தார்.

1034

சிவநேசர்
2933
தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பாற்
பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருளிது வெனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார் சிவநேச ரென்பார்.

1035