2936 | கற்றை வார்சடை முடியினா ரடியவர் கலப்பில் உற்ற செய்கையி லொழிவின்றி யுருகிய மனமும் பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ் செற்ற மேவிய சீலமு முடையராய்த் திகழ்வார், | |
| 1036 |
2937 | ஆன நாள்செல வருமறைக் கவுணியர் பெருமான் ஞான போனக நுகர்ந்தது நானில முய்ய ஏனை வெஞ்சமண் சாக்கிய மிழித்தழித் ததுவும் ஊன மில்புக ழடியர்பாற் கேட்டுவந் துளராய், | |
| 1037 |
2928 | செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ் எல்லை யில்லதோர் காதலி னிடையறா வுணர்வால் அல்லு நண்பக லும்பிந் தவரருட் டிறமே சொல்ல வுஞ்செயல் கேட்கவுந் தொழிலின ரானார். | |
| 1038 |
| 2934. (இ-ள்.) கற்றை...மனமும் - கற்றையாகிய நீண்ட சடையினையுடைய முடியவரது அடியார்களுடன் கூடிய கூட்டத்துடன் பொருந்திய செய்கையில் இடைவிடாது உருகிய மனத்தினையும்; பற்றிலா....சீலமும் - சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாத நெறிகளையுடைய பரசமயங்களை நீக்கும் செற்றம் பொருந்திய நல்லொழுக்கத்தினையும்; உடையராய்த் திகழ்வார் - கொண்டுடையவராகிய விளங்குவாராய், |
| 1036 |
| 2935. (இ-ள்.) ஆன நாள் செல - அவ்வாறாயின நாள்கள் பல கழிய; அருமறை...இழித்தழித்ததுவும் -அரிய வேததியராய்க் கவுணியர் குலத் தலைவராகிய பிள்ளையார் சிவஞான அமுதுண்டருளியதனையும் உலகமுய்தற் பொருட்டுப் புறச் சமயங்களாகிய கொடிய சமண் சாக்கியச் சமயங்களின் கீழ்நிலையை விளக்கி இழித்து எடுத்துக் காட்டும் வகையாலே அவை அடைந்திருந்த முதன்மையை ஒழித்ததனையும்; ஊனமில்...உவந்துளராய் - குற்றமில்லாத புகழினையுடைய அடியார்கள் வந்து சொல்லக் கேட்டு மகிழ்ந்தனராகி; |
| 1037 |
| 2936. (இ-ள்.) செல்வ மல்கிய...உணர்வால் - அருண்ஞானச் செல்வம் நிறைந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையாரது திருவடிகளில் அளவில்லாத ஒப்பற்ற பெருவிருப்புடன் இடையறாத அன்புபூண்ட வுணர்ச்சியினாலே; அல்லும்...ஆனார் - இரவும் பகலும் அடைவிடாது நினைந்துகொண்டு அவரது அருளின் தன்மைகளையே தாம் வாக்கினாற் புகழ்ந்து பாராட்டுதலும் அருட்செயல்களை அன்பர்களிடம் கேட்பதுமாகிய இவையே தமது வாழ்க்கைக்குரிய தொழில்களாக மேற்கொண்டவராயினார். |
| 1038 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்ற; முன் ஒரு பாட்டைத் தனிமுடிபாகக் கொண்டுரைத்து, ஏனை யிரண்டினையும் ஒருமுடிபாக்கியுரைக்கினு மிழுக்கில்லை. பொருட்டொடர்பும் சொன்முடிபும் பற்றி இவ்வாறுரைக் கப்பட்டது. |
| 2934. (வி-ரை.) அடியவர் கலப்பில் உற்ற செய்கையில் - அடியார் கூட்டத்திற் பொருந்தும் தன்மையில். செய்கை - இங்குத் தன்மை என்றற பொருளில் நிகழ்ச்சி என்றலுமாம். |