| நானிலமுய்ய....இழித்தழித்ததுவும் - பிள்ளையார் பரசமய நிராகரிப்புச் செய்தருளியது உலகமுய்யச் செய்ததேயன்றி இகல் முதலிய மாறுகோளால் அன்று; "இகலில ரெனினும்" (2752) என்று இதனை முன் குறித்தது காண்க; சைவத்திற் காணும் பரசமய நிராகரணத்தின் உள்ளுறை இஃது என்பதாம். |
| இழித்து அழித்ததுவும் - இழித்தலினாலே அழித்தது. இழித்தலாவது அப்பரசமயங்களின் அழிவு நிலையினை வெளிப்படக் காட்டுதல்; இவை பிள்ளையாரது பதிகங்களில் 10-வது பாட்டாகிய சமண்பாட்டிற் றேற்றிய பொருள்கள்; இவையே அக்காலத்தில் சிவநேசர் கேட்ட செய்தி. சமணரை வாதில் வென்றழித்தலும் புத்தவாத வெற்றியும் பின்னர்ப் பல ஆண்டுகளின் பின் அவை நிகழ்ந்தபோது கேட்கும் செய்தி மேல் (2948 - 2950) உரைப்பது காண்க. இங்குக் குறித்தவை "புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற நெறிநில்லா, வொத்த சொல்ல" (நட்டபாடை - பிரமபுரம் - 10) என்பன முதலிய பதிகப் பகுதிகள். |
| ஊனமில் புகழ் அடியர்பாற் கேட்டு - அடியார்கள் கூடியபோது பேசுவன சிவன் பெருமைகளும் அடியார்களின் பெருமைகளுமேயன்றி, நம்போலியர் போன்று அழியுந் தன்மையான வெற்றுரைகளல்ல என்பதாம். ஊனமில் புகழ் - இதனாலே அவர் புகழ் ஊனமில்லாததாயிற்று. |
| கேட்டு உவந்துளராய் - அக்கேள்வியே சிவநேசருக்கு மிக மகிழ்ச்சி தருவன ஆயின. |
| ஊனமில் புகழ் - மேற்கூறியவாறன்றி, இதனை ஞானபோனக நுகர்ந்ததும், இழித்தழித்ததுமாகிய பிள்ளையாரது குற்றமற்ற புகழ்களை என்று கூட்டி உரைத்தலுமாம். புகழ் - கேட்டு என்க. |
| 1037 |
| 2936. (வி-ரை.) இப்பாட்டினால் முன் கூறியபடி கேட்டு வந்துள்ளமை காரணமாகச் சிவநேசர் மேற்கொண்டொழுகிய ஒழுக்கநிலை கூறப்பட்டது. |
| காதலின் இடையறா உணர்வால் - இடையறாது கொண்ட பெருவிருப்பு மேற் கொண்ட வுணர்ச்சியினாலே; காதலின் - உணர்வு என்க. |
| உணர்வால் - சொல்லவும் - கேட்கவுமாகவுள்ள தொழிலினர் - உணர்வு காரணமாகச் சொல்லுதலும் கேட்டலுமாகிய தொழில்களே அவர்பானிகழ்ந்தன என்பது, பிள்ளையாரது அருட்டிறங்களைத் தாம் பன்னிப் பன்னிப் புகழ்ந்து சொல்லுதலும், அவரது அருட்செயல்களை அடியார்கள்பாற் கேட்டலுமே தமது தொழிலாக. |
| அல்லும் நண்பகலும் புரிந்து - இரவும் பகலும் இடைவிடாது நினைந்து. |
| செயல் கேட்கவும் - செயல்களையே அடியர்பால் கேட்க. |
| 1038 |
2937 | நிகழு மாங்கவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த் திகழு நீடிய திருவினிற் சிறந்துள ராகிப் புகழு மேன்மையி லுலகினிற் பொலிந்துளா ரெனினும் மகவி லாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு; | |
| 1039 |
2938 | அரிய நீர்மையி லருந்தவம் புரிந்தர னடியார்க் குரிய வர்ச்சனை யுலப்பில செய்தவந் நலத்தாற் கரிய வாங்குழன் மனைவியார் வயிறெனுங் கமலத் துரிய பூமக ளெனவொரு பெண்கொடி யுதித்தாள். | |
| 1040 |