| களிசிறத்தல் - மகிழ்ச்சியில் மீக்கூர்தல். இங்குக் கூறியவை முன்பாட்டிற் கூறிய கொடையினுஞ் சிறப்பும் பெரும்ம பயனுமுடையவை என்பார், முன் "மகிழ்ந்தார்" (2949) என்றவர் ஈண்டுப் "பெருங்களி சிறந்தார்" என்றார். அன்றியும்ம முன் குறித்தது அவரது உலகியல் தொடர்பு பற்றியது; ஈண்டுக் கூறியவை அவரது உயிரின் உயர்ந்த தொடர்பு பற்றியன. |
| மற்றிதுவே யெனும் பெருமகிழ் - என்பதும் பாடம். |
| 1042 |
2941 | சூத நல்வினை மங்கலத் தொழின்முறை தொடங்கி வேத நீதியின் விதியுளி வழாவகை விரித்த சாத கத்தொடு சடங்குள் தசதினம் செல்லக் காதன் மேவிய சிறப்பினிற் கடிவிழா வயர்ந்தார். | |
| 1043 |
| (இ-ள்.) சூத நல்வினை......தொடங்கி - பிள்ளை பெற்றவுடன் செய்யப்படும் நற்சடங்குகளை முறையாகச் செய்யத் தொடங்கி; வேத.....சடங்குகள் - வைதிக நியமப்படி விதித்தவற்றின்கண் வழுவாதபடி விரித்துக் கூறப்பட்ட சாதகனம முதலாக வரும் சடங்குகள்; தசதினம் செல்ல - மகவு பிறந்தபின் பத்து நாட்களிலும் செய்ய; காதல்......விழா அயர்ந்தார் - பெருவிருப்பம் பொருந்திய சிறப்பினாலே அழகிய மங்கல விழா நிகழ்த்தினர். |
| (வி-ரை.) சூத நல்வினை - பிரசவம் என்பது வடமொழி வழக்கு. |
| மங்கலத் தொழின்முறை - மகப் பிறந்த பின்னர்த் தொடங்கிப் பத்து நாட்களும் செய்யத்தக்கனவாய் விதித்த செயல்கள். "சூதநிகழ் மங்கல வினைத்துழனி" (1933) என்றவிடத் துரைத்தவை பார்க்க. |
| வேத நீதியின் விதியுளி - வேதங்களின் நியமித்த விதிகளின் முறைமை. இவை கற்ப சூத்திரங்களுட் காணப்படுவன. விதியுளி - வேள்வி என்றலுமாம். (1928) |
| சாதகம் - "சாதக முறைப்பல சடங்கு" (1933). பிறந்த நாளும் ஓரையும் பற்றிய கோள்களின் நிலைகளைக்கொண்டு சோதிட நூல்வழிச் செய்யும் குறிப்புச் சாதகம் என வழங்கப்படும்; பல பிறவியாகிய பயணத்தி னுட்பட்டுச் சென்று கொண்டிருக்கும் இவ்வுயிருக்கு இப்பிறவியுள் நிகழ்வனவற்றைக் காட்டுவது என்பது பொருள் போலும். சாதகம் செப தான வோமங்கள் பிறந்த உடன் செய்யப்படுவன. |
| தசதினம் - "மறை தொடர்ந்த நடைநூலின், மேயவிதி யையிரு தினத்தினும் விளைத்தார்" (1938); முதல் மூன்று வருணத்தாருக்கும் இவ்வினைகள் பத்து நாட்கள் விதிக்கப்படுவன. தினம் - தினத்தின்கண்ணும்; ஏழனுருபு விரிக்க. |
| சடங்குகள் - செல்ல - செல்லுதல் - செலுத்தப்படுதல்; செய்தல். ஆறாநாளில் விக்கின சாந்தி, ஒன்பதாநாளில் பலி, பத்தாநாளில் அன்னதானம் முதலியன. |
| கடிவிழா - அயர்ந்தார் - கடி - மங்கலம். "அருங்கடி மணம்வந் தெய்த" (169); விழா அயர்தல் - விழாக் கொண்டாடுதல். |
| சாதகத் தொழில் - என்பதும் பாடம். |
| 1043 |
| பூம்பாவை |
2942 | யாவ ரும்பெரு மகிழ்ச்சியா லின்புறப் பயந்த பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கி பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க. | |
| 1044 |