| ஓராண்டு - தளர்நடை |
2943 | திங்க டோறுமுன் செய்யுமத் திருவளர் சிறப்பின் மங்க லம்புரி நல்வினை மாட்சியிற் பெருக அங்கண் மாநக ரமைத்திட, வாண்டெதி ரணைந்து தங்கு பேரொளிச் சீறடி தளர்நடை பயில; | |
| 1045 |
| ஏழு ஆண்டு |
2944 | தளரு மின்னினங் குரமெனத், தமனியக் கொடியின் வளரி ளந்தளிர்க் கிளையென, மணிகிள ரொளியின் அளவி லஞ்சுடர்க் கொழுந்தென, வணைவுறும் பருவத் திளவ னப்பிணை யனையவர்க் கேழியாண் டெய்த. | |
| 1046 |
| கழல் அம்மனை பந்து |
2945 | அழகின் முன்னிளம் பதமென, வணிவிளக் கென்ன, விழவு கொண்டெழும் பேதைய ருடன்விளை யாட் கழலொ டம்மனை கந்துக மென்றுமற் றினைய மழலை மென்கிளிக் குலமென மலையிடை யாடி, | |
| 1047 |
| சிற்றில் சிறுசோறு ஊசல் |
2946 | பொற்றொ டிச்சிறு மகளிரா யத்தொடும் புணர்ந்து சிற்றின் முற்றவு மிழைத்துட னடுந்தொழிற் சிறுசோ றுற்ற வுண்டிகள் பயின்றொளி மணியூச லாடி மற்று மின்புறு வண்டலாட் டயர்வுடன் வளர. | |
| 1048 |
2947 | தந்தை யாருமத் தளிரிளங் கொம்பனா டகைமை இந்த வையகத் தின்மையா லின்புறு களிப்பு வந்த சிந்தையின் மகிழ்ந்து, "மற் றிவண்மணம் பெறுவான் அந்த மில்லென தருநிதிக் குரிய" னென் றறைந்தார். | |
| 1049 |
| 2943. (இ-ள்.) திங்கள் தோறும்......அமைத்திட - மாதந்தோறும் முன் செய்யப்படும் அந்தச் செல்வம் வளரும் மங்கலங்களாகிய சடங்குகளும் ஏனை நல்வினைகளும் மாண்பு பொருந்தப் பெருகும்படி அங்குப் பெரிய நகரத்தினர்கள் அமைவுபடுத்தியிட; ஆண்டெதி ரணைந்து.....பயில - ஓராண்டு நிறைந்து தங்கும் பேரொளியினையுடைய சிற்றடிகள் தளர்நடை பயில; |
| 1045 |
| 2944. (இ-ள்.) தளரும்...அங்குரமென - துவள்கின்ற மின்னலின் முளைபோலவும்; தமனியக் கொடியென....கிளையின் - பொன்னலாகியதோர் கொடியினது வளர்கின்ற இளந் தளிரினது கிளைபோலவும்; மணிகிளர்......கொழுந்தென - இரத்தின மணிகளினின்றும் கிளர்கின்ற ஒளியினது அளவுட்படாத அழகிய சுடர்க்கொழுந்து போலவும்; அணைவுறும் பருவத்து - சார்கின்ற பருவங்களிலே; இள அ(ன்)னப் பிணை யனையவர்க்கு ஏழ்யாண்டு எய்த - இளவன்னப்பேடை போலும் அவருக்கு ஏழு ஆண்டுகளின் பருவம் பொருந்த, |
| 1046 |
| 2945. (இ-ள்.) அழகின்.....விளக்கென்ன - அழகு என்றதொரு பொருளின் முதலிற் பெறப்படும் இளம்பத மென்னவும், அணிவிளக்கு என்னவும் கூறும்படி வளர்ந்து; விழவு...பேதையருடன் - விழக்கொண்டு கூடி எழுகின்ற சிறுமியருடனே கூடி; விளையாட்டில்....ஆடி - விளையாடல் பயில்வதில் கழல் - அம்மானை - பந்து என்று இன்னவற்றை மழலை ததும்பும் நிலை மெல்லிய கிளிக்கூட்டங்கள் போலப் பாடி எழ மனையினுள்ளே ஆடி, |
| 1047 |