1340திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

யாதலினால்" (1728) எனவரும் அம்மையார் புராண வரலாறு ஈண்டுச் சிந்திக்கற்பாலது. ஆண்டுத் தனதத்தனார் போலவே சிவநேசரும் பெருங்குடி வணிகராதலும் கருதுக.
மற்று இவள் - முன் கூறியபடி இந்த வையகத்தில் ஒப்புவே றில்லாத் தகைமையுடைய இவள் என்க. மற்று - வேறாகிய என்பது. இனி, இவள் மணம்பெறுவான் உலகில் ஒருவனுமல்லனாம்; மற்று எல்லா உயிர்களுக்கு முயிர்நாயகனாகிய சிவனேயாம். "தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்" (3015) என்றபடி பிற உயிர்களின் வேறாகிய சிவனே என்ற குறிப்புமாம்; இனி, இவள் இவ்வுடலத்தினுள் மணத்தால் நாயகனையடையும் நிலையின்றிப் பின்னர்ப் பிள்ளையார் சடையவர் கருணை காண்வர வுற்பவித்தபின், அந்நிலையில் சிவமணம் பெறுவாள் என்ற குறிப்த்தரவும் நின்றது. அவரே எல்லாவற்றையும் உடையமையாக உடையவர் என்பது.
அறைந்தார் - யாவருமறியப் பறைசாற்றியதுபோல வெளிப்பட மொழிந்தனர் என்பது அறை - என்றதன் றொனி.
தளரிளங் - என்பதும் பாடம்.

1049

2948
ஆய நாள்களி லமண்பயில் பாண்டிநா டதனைத்
தூய ஞானமுண் டருளிய தோன்றலா ரணைந்து
மாய வல்லமண் கையரை வாதில்வென் றதுவும்,
மேய வெப்பிடர் மீனவன் மேலொழித் ததுவும்,

1050

2949
நெருப்பி லஞ்சினார் தங்களை நீரிலொட் டியபின்
மருப்பு நிள்கழுக் கோலின்மற் றவர்களே றியதும்
விருப்பி னாற்றிரு நீறுமீ னவற்களித் தருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம் போற்றிவித் ததுவும்,

1051

2950
இன்ன வாறெலா மறிந்துளா ரெய்தியங் கிசைப்பச்,
சொன்ன வர்க்கெலா மிருநிதி தூசுட னளித்து,
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத்திசை நோக்கிச்,
சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந் தெழுந்துசெந் நின்று,

1052

2951
சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக்
"கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
முற்று மென்னையுங் கொடுத்தனன் யா" னென்று மொழிந்தார்.
2948. (இ-ள்.) ஆய நாள்களில் - முன்கூறிய அவ்வாறாகிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்தில்; அமண் பயில்...அணைந்து - சமணர்கள் மிக்கிருந்த பாண்டி நாட்டினைத் தூய ஞானபோனக முண்டருளிய பிளளயார் சென்றணைந்து; மாய...வென்றதுவும் - வஞ்சனையில் வல்ல அமணர்களாகிய கீழ்மக்களை வாதில் வென்றதுவும்; மேய வெப்பு...ஒழித்ததுவும் - வந்து பொருந்திய வெப்பு நோயின் துன்பத்தினைப் பாண்டியனது உடலினின்றும் நீக்கியதுவும்;

1050

2949. (இ-ள்.) நெருப்பில்.....ஒட்டியபின் - நெருப்பின் வாதத்திற் றோற்று அஞ்சிய அவ்வமணர்களை நீரின் வாதத்தினில் ஒட்டி வென்றதன் பின்; மருப்பு.....