[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1345

நவ்வி வாள்விழி நறுநுதற் செறிநெறி கூந்தற்
கொவ்வை வாயவண் முகிழ்விரல் கவர்ந்தது குறித்து;

1057

2956
நாலு தந்தமு மென்புறக் கவர்ந்துநஞ் சுகுத்து
மேலெ ழும்பணம் விரித்துநின் றாடிவே றடங்க
நீல வல்விடந் தொடாந்தெழ, நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது போன்றுள மயங்கி,

1058

2957
தரையில் வீழ்தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி
வரைசெய் மாடத்தி னுட்கொடு புகுந்திட வணிகர்
உரையு முள்ளமு நிலையழிந் துறுதுயர் பெருகக்
கரையில் சுற்றமுந் தாமுமுன் கலங்கினார்; கலுழ்ந்தார்.

1059

2953. (இ-ள்.) ஆற்று....நாள்களில் - முன் கூறியவாறு சிவநேசர் செயலாற்றிவரும் நாட்களிலே; அணங்கனார்....மலர் கொய்வான்- தெய்வப் பெண்போன்ற பூம்பாவையார் கன்னிமாடத்தினில் பால் போன்ற தூயநீர் நிறைந்த தடத்தினருகில் பூச்சோலையின் பக்கத்தில் குளிர்ந்த பூக்கொய்யும் பொருட்டு; போற்று...புறம் போந்து - தம்மைப் போற்றும் நீண்ட கூந்தலையுடைய சேடிமார்களுடனே புறத்திற் போய்; கோற்றொடி...கொய்ய - திரண்ட வளையணிந்த தளிர் போன்ற கையினால் முகைக்கும் பருவத்து மலர்களைக் கொய்யவே,

1055

2954. (இ-ள்.) அன்பர்....அல்லால் - அன்பராகிய சிவநேசர் இன்பம் பொருந்தும் விருப்பத்தினாலே அளித்த அளவுமட்டிலல்லாமல்; பொன்...என்பது - பொன் விளங்கும் நீரினையுடைய சீகாழிப் பிள்ளையாருக்கு இது புணர்வுறாது என்பதனை; உட்கொண்ட பான்மை - உட்கொண்டுள்ள ஊழானதுவே; ஓர்...போல - ஒரு நச்சுப் பற்களையுடைய இளம் பாம்பாகி முன்பு வந்ததுபோல; ஓர்....அரவம் - முள்போன்ற பற்களையுடையதோர் பாம்பு;

1056

2955. (இ-ள்.) மௌவல்...எய்தி - மல்லிகை முல்லைக் கொடிகள் படர்ந்த பந்தரிலே மறைந்துவந்து சேர்ந்து; செவ்வி....பொழுதினில் - பருவத்துப் புதிய முகைகளை(ப் பூம்பாவையார்) கொய்யும் பொழுதில்; நவ்வி.....வாயவள் - மான் போன்ற கூரிய கண்களையும், நறிய நுதலினையும், செறிவும் நெறிவுமுடைய கூந்தலினையும், கோவைக்கனி போன்ற வாயினையும் உடைய பூம்பாவையாரது; மலர்ச் செங்கை - மலர் போன்ற கையில்; முகிழ் விரல் கவர்ந்தது குறித்து - பூக்கொய்யக் கூட்டிக் கூப்பிய விரலினைக்குறித்துக் கடித்ததாகி;

1057

2956. (இ-ள்.) நாலு...வேறு அடங்க - நச்சுப் பற்கள் நான்கும் எலும்பளவும் அழுந்தக் கடித்து நஞ்சினை உகுத்து மேலே எழும் படத்திளை விரித்துநின்று ஆடி வேறு இடத்தில் மறைந்து ஒடுங்கவே; நீல...தொடர்ந்து எழு - கரிய வெவ்விய விடம் அதனைத் தொடர்ந்து மேலே எழுந்ததனால்; மென்பூ.......போன்று - மெல்லிதாகிய மலர்மாலையிடையில் தீப் பட்டதுபோல; நேரிழை - நேரிய இழைகளையணிந்த பூம்பாவையார்; உளம் மயங்கி - மனமயங்கி;

1058

2957. (இ-ள்.) தரையில் வீழ்தர - நிலத்தில் வீழ; சேடியர்...புகுந்திட - தாதியர்கள் திடுக்கிட்டு அஞ்சித் தாங்கிச் சென்று அவருக்கென்று அமைவு செய்யப்பட்ட கன்னிமாடத்தினுள்ளே கொண்டு புகுந்திட; வணிகர்.....கலுழ்ந்தார் - சிவ