| 2957. (வி-ரை.) வெருக்கொடு - சடுதியில் நிகழ்ந்த பேரச்சத்தால் திடுகிட்டு. தாங்கி - நிலத்தில் வீழாமல் கைகொடு தாங்கி. |
| வரைசெய் மாடம் - இவர்க ளிருத்தற்கென்று வரைவு செய்துவைத்த கன்னிமாடம். வரை செய் - வரை - மலை என்று கொண்டு மலை போன்ற என்பாரு முண்டு. |
| வணிகர் - சிவநேசர்; கரை - அளவு - எல்லை. கரையில் சுற்றமும் - "சுற்ற நீடிய கிளையெலாம்" (2952); முன் சிவநேசர் கூறிய (2952) வாற்றாற் சிதைவுறாது வாழ்வினும் தாழ்வினும் வரைவுபடாது சுற்றிச் சூழ்வோர் என்பது குறிப்பு. |
| நிலையழிந்து - நிலை தடுமாறி உரைகுழறி உள்ளம் மயங்கி என்க. கலுழ்தல் - அழுதல். |
| 1059 |
| விடந்தொ லைத்திடும் விஞ்சையிற் பெரியார் மேலோர் அடர்ந்த தீவிட மகற்றுதற் கணைந்துளா ரனேகர் திடங்கொண் மந்திரந் தியானபா வகநிலை முட்டி தொடர்ந்த செய்வினைத் தனித்தனித் தொழிலராய்ச் சூழ்வார், | |
| 1060 |
| மருந்து மெண்ணில மாறில செய்யவும் வலிந்து பொருந்து வல்விட மேழுவே கமுமுறை பொங்கிப் பெருந்த டங்கண்மென் கொடியனாள் தலைமிசைப் பிறங்கித் திருந்து செய்வினை யாவையுங் கடந்துதீர்ந் திலதால். | |
| 1061 |
| ஆவி தங்குபல் குறிகளு மடைவில வாக மேவு காருட விஞ்சைவித் தக"ரிது விதி"யென் றோவும் வேலையி லுறுபெருஞ் சுற்றமு மலறிப் பாவை மேல்விழுந் தழுதனர் படரொலிக் கடல்போல். | |
| 1062 |
| 2958. (இ-ள்.) விடம்....அனேகர் - விடத்தைத் தீர்த்திடும் வித்தையிற் கைவந்த பெரியோர்களாகிய மேலவர்கள் அனேகர்கள் பற்றிய கொடிய விடத்தினைப் போக்குதற்காகச் சேர்ந்தார்களாகி; திடங்கொள்.... சூழ்வார் - வலிமையுடைய மந்திரமும் தியானமும் பாவனையும் முட்டி நிலையுமாய்த் தொடர்ந்த தீர்வுச் செயல்களைத் தனித்தனி செய்வாராய்ச் சூழ்ந்து, |
| 1060 |
| 2959. (இ-ள்.) மருந்தும்....செய்யவும் - (முன் கூறிய நான்கனோடும்) அளவில்லாத இணையில்லாத மருந்துகளையும் செய்யவும்; வலிந்து....பொங்கி - வலிமையாய்ப் பற்றிக்கொண்டு கொடிய விடம் ஏழு வேகமும் முறையாக மேலேறி; பெருந்தடங்கண்.....பிறங்கி - பெரிய விசாலமாகிய கண்களையுடைய மெல்லிய கொடிபோன்ற பூம்பாவையாரது தலையினை மேற்கொண்டு விளங்க; திருந்து.....தீர்ந்திலதால் - திருந்தும்படி செய்ததீர்வினைகள் எல்லாவற்றையும் கடந்து தீர்ந்திலதாகவே; |
| 1061 |
| 2960. (இ-ள்.) ஆவி.....இலவாக - உயிர் உடம்பினுள் தங்குதற்குரிய பல குறிகளும் பொருந்துதல் இல்லையாக; மேவு...வேலையில் - வந்து பொருந்திய காருடவித்தை வல்லவர்களும் "இது விதி" என்று கைவிட்டொழியும் வேலையில்; உறுபெரும்.....கடல்போல் - உற்ற பல சுற்றத்தார்களும் கடல்போல் அலறிப் பாவை மேல் விழுந்தழுதனர். |
| 1062 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்றன. |