| தனித்தனித் தொழிலராய் - அவ்வவர் தத்தம் திறம் முழுதும் செலுத்திக் காண்பாராய். |
| சூழ்வார் - சூழ்தல் - ஆழ எண்ணுதல். உடலைச் சுற்றி என்பதுமாம். |
| 1060 |
| 2959. (வி-ரை.) மருந்தும் - மந்திரம் பாவனைபற்றிய செய்வினைகளையன்றி மருந்தும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |
| மாறில - பயன்றருதலில் தவறாமையின் இணையற்ற. திடங்கொண் மந்திரம் போலவே மருந்தும் மாறில என்றதாம். வலிந்து - கடந்து; வலிமை பெற்று. |
| பொருந்து - வந்து பொருந்திய; "பான்மை" (2954) போலப் பொருந்திய என்பதும் குறிப்பு. |
| ஏழு வேகமும் - உம்மை முற்றும்மை. "தலைக்கொண்ட வேழாம் வேகம்" (1809) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
| முறை பொங்கி - தலைமிசைப் பிறங்கி - முறை - ஒன்றன்மேல் ஒன்றாக; தலை மிசை - விடந் தலைக்கேறி மூளையைப் பற்றிப் பரவினால் தீர்வின்றென்பர். |
| திருந்து செய்வினை - திருந்தும்படி செய்யும் தீர்தொழில் - மாற்று; திருத்தமாகச் செய்யும் என்றலுமாம். |
| கடந்து - மேற்சென்று தன் வலிமையே மிக்கு. |
| தீர்ந்திலது - தீராதாகி; முற்றெச்சம். தீர்ந்திலதாய்க் குறிகளு மடைவிலவாக என வரும்பாட்டுடன் றொடர்ந்து முடிக்க. முற்றாகக்கொள்ளினு மிழுக்கில்லை. |
| 1061 |
| 2960. (வி-ரை.) ஆவி தங்கு பல் குறிகள் - இவை உயிர்ப்பு - வெப்பம் - அசைவு - முதலாயின; அடைவு - இருத்தல் - தங்குதல்; ஆக - ஆதலின். |
| இது விதி - இது விதியின் விளைவு; ஊழான் வந்தது - மனித முயற்சியாற் பயனின்று - எனக் கைவிடும் நிலை. |
| வித்தகர் - கைவந்த புலவர்; முன் "பெரியராம் மேலோர்" (2959) என்றமை காண்க. Experts என்பர் நவீனர். |
| ஓவும் வேலை - ஓவுதல் - நீங்குதல் - ஒழிதல்; உயிர் போய்விட்டது என்று கைவிட்ட நேரம்; "ஓவு நாளுணர் வழியு நாளுயிர்போகு நாளுயர் பாடைமேல்" (தேவா - நம்பி); "போவார்க ளிதுநம்மாற் போக்கரிதா மெனப்புகன்று" (1319); "குண்டர்களுங் கைவிட்டார்" (1320). |
| பாவைமேல் விழுந்தழுதனர் - இறந்தா ருடலின்மேல் விழுந்தழுதல் நெருங்கியஅன்புடையாரின் துயர மிகுதியின் செயலாகிய மெய்ப்பாடு. "மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள்" (கந்தபு. பானு. வதை - 194). |
| படர் ஒலிக்கடல்போல் - பரப்பும், பேரொலியுடைமையும் உவமத்தின் பொதுத் தன்மைகள்; வினையும் மெய்யும்பற்றி வந்த உவமம். |
| விழுந்தழுதது - என்பதும் பாடம். |
| 1062 |
2961 | சிந்தை வெந்துய ருறுசிவ நேருந் தெளிந்து வந்த செய்வினை யின்மையில் "வையகத் துள்ளோர் இந்த வெவ்விட மொழிப்பவர்க் கீகுவன் கண்ட அந்த மின்னிதிக் குவை" யெனப் பறையறை வித்தார். | |
| 1063 |
| (இ-ள்.) சிந்தை....தெளிந்து - மனத்தினில் கொடிய துன்பம் பொருந்தப்பெற்ற சிவநேசரும் பின்னர்த் தெளிவுகொண்டு; வந்த...இன்மையில் - செய்யநின்ற தீர் |