1352திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

தொழில்கள் வேறு எவையுமில்லாமையால்; "வையகத்துள்ளோர்....... குவை" என - "உலகத்தில் உள்ளோர்களில் யாவராயினும் இந்தக் கொடிய விடத்தினை ஒழிப்பாராயின் அவருக்கு இங்குக் கண்ட (காணப்பட்ட) எல்லையில்லாத செல்வத் திரள் எல்லாம் கொடுப்பேன்" என்று; பறை அறைவித்தார் - எங்கும் யாவரும் அறியும்படி பறைசாற்றி அறிவித்தனர்.
(வி-ரை.) வெந்துயர் உறு - "முன்னர் உரையு முள்ளமு நிலையழிந் துறுதுயர் பெருக" (2957) என்றது பாவையாரை விடந்தீண்டி யலமந்தமை தெரிந்த உடன் நிகழ்ந்த நிலை. இங்குக் கூறியது விஞ்சை வித்தகரும் "இது விதி" என்று கைவிட்டொழிந்து ஆவியுந் தீர்ந்ததெனக் கண்டபோது நிகழ்ந்த நிலை.
தெளிந்து - துயரினாற் கவரப்பட்டு ஒன்றுந் தோன்றாதிருந்த நிலையினின்று தெளிந்து; மேற்சய்யலாவதனை ஆய்ந்து துணியும் நிலை பெற்று.
வந்த செய்வினை - கைவந்த தீர்தொழில்; வந்த - மேற்கொள்ளத் தக்கதாய் வரப்பெற்ற; செய்வினை . 2958 -2959).
இன்மையில் - பறையரைவித்தார் - தாம் தெரிந்து அழைத்து வந்தோரும்தாமாக அறிந்து வந்தோரும் ஆகி முன் வந்த விஞ்சை வித்தகரொழிய, இனி யாரேனு முளராயின் வருக என்று ஊரவருக்கு அறிவித்தபடி.
ஈகுவன் அந்தமில் நிதிக்குவை - "இவள் மணம்பெறுவான், அந்த மில்லென தருநிதிக் குரியன்" என்றறைந்தார் (2947) எனவும், "பிறங்கிய நிதியும் முற்று மென்னையும் கொடுத்தனன்" என மொழிந்தார் (2951) எனவும் முன்னர்க் கூறிய சிவநேசர், அவ்வாறு தாம் பிள்ளையாருக்காக்கிய நிதிக்குவை இங்கு "வெவ்விட மொழிப்பவர்க் குவன்" என்றது பொருந்துமா றென்னையோ? எனின், பொருந்தும்; என்னை? தாம் அன்பினால் அளித்த பாங்கினால் பிள்ளையாரது உடைமையாயின பூம்பாவையாரைக் காத்து அவர்பால் சேமமுறச் சேர்ப்பிக்கும் பொருட்டாதலின் அமையுமென்க.
ஈவனென்னுடைய - என்பதும் பாடம்.

1063

2962
முரசி யம்பிய மூன்றுநா ளகவையின் முற்ற
அரசர் பாங்குளோ ருட்பட வவனிமே லுள்ள
கரையில் கல்வியோர் யாவரு மணைந்துங் காட்சிப்
புரையில் செங்கையிற் றீர்ந்திடா தொழிந்திடப் போனார்.

1064

(இ-ள்.) முரசு.....அகவையின் - முன் கூறியவாறு பறைசாற்றிய பின் மூன்று நாள் எல்லையளவில்; முற்ற...அணைந்து - அரச சபையிலுள்ளோர்கள் உட்பட உலகத்தில் உள்ள எல்லையில்லாத கல்வியுடையோர் யாவர்களும் முற்ற வந்தணைந்து; தம் காட்சி.....போனார் - தாந்தாம் உறுதியாய்க் கைகண்ட குற்றமற்ற தீர்தொழில்கள் எவற்றாலும் தீராதொழிந்தமையாற் போயினார்.
(வி-ரை.) மூன்றுநா ளகவையில் - பறை சாற்றிய எல்லையின் அளவாகிய மூன்றுநாள் அளவின்கண். அகவை - ஏழனுருபு. "ஆடித்திங்க ளகவையின்" (சிலப் - உரைபெறுகட் - 3). மூன்றுநா ளளவும் உடலின்தாதுக்கள் சிதைவுபடாது நிறுத்தவல்லதொரு அமைதி அக்காலத்தும் உள்ளதுபோலும்.
முற்ற - யாவரும் - என்று கூட்டுக; ஒருவருமொழியாமே எல்லாம்.