| அரசர் பாங்குளோர் - அரச சமகப் புலவர். கலைத்துறைகள் எவற்றினும் வல்லோர்களை அரசர் கூவித் தேர்ந்து தக்கோரைத் தமது சமுகத்தில் வைத்து ஆதரித்து நாட்டுக்கு நலஞ் செய்வித்தல் முன்னைநாள் வழக்கு; இறையனாரகப்பொருள் வரலாறு, சங்க வரலாறு, திருவாதவூரடிகள் வரலாறு, திருத்தொண்டர் புராண வரலாறு முதலியவையும், முன்னைநாள் தமிழரசர் காலத்து நாட்டு நடப்புச் சரிதங்களும், கல்வெட்டுக்கள் முதலியவையும் காண்க. இங்குக் கூறிய அரசர் கச்சிமாநரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மரபில் வந்த சிம்மவிட்டுணுவும் அவன் மகன் மகேந்திர வர்மனும் ஆவார்கள் என்பது கருதப்படும். |
| அவனிமேலுள்ள கரையில் கல்வியோர் - அரசர் பாங்கு பெறாத உலகில் விளங்கிய பெருங் கலைவாணரும் பலருண்டாதலின் அவர்களும். |
| காட்சிப் புரையில் செய்கை - காட்சியாவது ஈண்டுக் கைகண்ட பயனைத்தருவது என்ற பொருளில் வந்தது. காட்சிச் - செய்கை - பண்புத் தொகை. புரையில் செய்கை - குறைபாடில்லாத தீர்தொழில். காட்சியும் செய்கையும் என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பினுமமையும்; இப்பொருளில் காட்சியாவது பார்வையால் விடத்தைத் தீர்க்கும் கலையின் முறை; "பார்த்த பார்வையா லிரும்புண்ட நீரெனப் பருகும் தீர்த்தன்" (திருவிளை. புரா) என்று கூறப்படும் தீக்கைமுறை இதற்கு மொக்கும். |
| முரசியம்பலும் - என்பதும் பாடம். |
| 1064 |
2963 | சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக் காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர் சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச் சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார், | |
| 1065 |
2964 | "உடைய பிள்ளையார்க் கெனவிவ டனையுரைத் ததனால் அடைவு துன்புறு வதற்கிலை யாநமக்" கென்றே யிடரொ ழிந்தபின், னடக்கிய வென்பொடு சாம்பல் புடைபெ ருத்தகும் பத்தினிற் புகப்பெய்து வைப்பார், | |
| 1066 |
2965 | கன்னி மாடத்தின் முன்புபோற் காப்புற வமைத்துப் பொன்னு முத்துமே லணிகலன் பூந்துகில் சூழ்ந்து பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி யதன்மேன் மன்னு பொன்னரி மாலைக ளணிந்துவைத் தனரால். | |
| 1067 |
2966 | மாலை சாந்தொடு மஞ்சன நாடொறும் வழாமைப் பாலி னேர்தரு போனகம் பகல்விளக் கினைய சாலு நன்மையிற் றகுவன நாடொறுஞ் சமைத்தே ஏலு மாசெய யாவரும் வியபபெய்து நாளில், | |
| 1068 |
2967 | சண்பை மன்னவர் திருவொற்றி யூர்நகர் சார்ந்து பண்பு பெற்றநற் றொண்டர்க ளுடன்பணிந் திருந்த நண்பு மிக்கநல் வார்த்தையந் நற்பதி யுள்ளோர் வண்பு கழ்ப்பெரு வணிகர்க்கு வந்துரை செய்தார். | |
| 1069 |