| பணிந்திருந்த நல்வார்த்தை - "ஒற்றிநகர் காதலித்தங் கினிதுறைந்தார்" (2930) என்று முன் கூறிவிடுத்த செய்தி. இதனைச் சரித வரலாற்றுத் தொடர்ச்சிபெற எடுத்துக்காட்டிய கவிநயமும் கண்டுகொள்க. |
| 1069 |
2968 | சொன்ன வர்க்கெலாந் தூசொடு காசுபொன் னளித்தே யின்ன தன்மைய ரெனவொணா மகிழ்சிறந் தெய்தச் சென்னி வாழ்மதி யார்திரு வொற்றியூ ரளவுந் துன்னு நீணடைக் காவணந் துகில்விதா னித்து, | |
| 1070 |
2969 | மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி நிகரில் பல் கொடித் தாமங்க ளணிபெற நிரைத்து நகர நீண்மறு கியாவையு நலம்புனை யணியாற் புகரில் பொன்னுல கிழிந்ததா மெனப்பொலி வித்தார்; | |
| 1071 |
2970 | இன்ன வாறணி செய்துபல் குறைவறுப் பேவி "முன்ன மொற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் பொன்ன டித்தலந் தலைமிசைப் புனைவ"னென் றெழுவார் அந்ந கர்ப்பெருந் தொண்டரு முடன்செல வணைந்தார். | |
| 1072 |
| 2968. (இ-ள்.) சொன்னவர்க்கெலாம்......அளித்தே - முன்கூறிய நல்வார்த்தையினை வந்து சொன்னவர்களுக்கெல்லாம் சிவநேசர் தூசும் காசும் பொன்னும் அன்போடு கொடுத்தே; இன்ன...எய்த - இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்லமுடியாத மகிழ்ச்சி மேலோங்க; சென்னி....விதானித்து - தலையினில் வாழ்வுபெறும் மதியினைத் தாங்கிய சிவபெருமான் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கும் நீண்ட நடைக்காவணமிட்டுத் துகிலால் விதானமும் கட்டி, |
| 1070 |
| 2969. (இ-ள்.) மகர தோரணம்...நிரைத்து - மகர தோரணங்களும், வளப்ப மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பற்ற பல கொடிகளும் மாலைகளும் என்றிவற்றை அழகு பொருந்த வரிசையாக அமைத்து; நகர நீண்மறுகு....பொலிவித்தார் - நகர முழுமையும் உள்ள நீண்ட தெருவுகள்எல்லாவற்றையும் நலம்பொருந்தச் செய்த அலங்காரங்களினால் குற்றமில்லாத தேவலோகமே கீழிறங்கியதாம் என்று சொல்லும்படி அழகு செய்தனராய், |
| 1071 |
| 2970. (இ-ள்.) இன்னவாறு...ஏவி - இவ்வாறெல்லாம் அலங்காரங்களைச் செய்து பலவகையாலும் குறைகளில்லாமற் செய்யும் ஏவலாட்களை ஏவி; முன்னம்...எழுவார் - முன்னர்ச்சி சென்று திருவொற்றியூர் நகரிலே முத்தமிழ் விரகராகிய பிள்ளையாரது பொன்னார்ந்த திருவடிகளை வணங்கித் தலைமேற் சூட்டிக்கொள்வேன் என்று எழுவாராகி; அந்நகர்....அணைந்தார் - அத் திருமயிலாபுரியில் வாழும் பெருந் தொண்டர்களும் தம்முடன் செல்லத் திருவொற்றியூரினைத் நோக்கிச் சென்றானர். |
| 1072 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2968. (வி-ரை.) சொன்னவர்க்கெலாம்...அளித்தே - முன்னர்ச் "சொன்னவர்க்கெலா மிருநிதி தூசுட னளித்து" (2951) என்றுரைத்தவை பார்க்க. |