| 2970. (வி-ரை.) பல் குறைவறுப்பு ஏவி - குறைவறுப்பு - குறைவுகள் நேராதபடி முன்னரே நாடி வேண்டுவனவற்றைச் செய்தல்; குறைவு - அறுத்தல் - குறைக ளெவையும் இல்லையாகச் செய்தல்; "பாண்டிமா தேவியார் மெய்க்குலச் சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல" (2421); "அத்தனிமுதற் றொண்டர்தாமே யாவையுங் குறைவறுத்திட" (2421). |
| முன்னம் - பிள்ளையார் இங்கெழுந்தருளு முன்னரே; செய்தி கேட்டதும் முதல் வேலையாக. |
| அடித்தலம் தலைமிசைப் புனைவன் - திருஅடிகளில் முடி பொருந்த வணங்குவேன்; அவ்வாற்றால் அடிகளை முடிமிசைச் சூடிக்கொள்வேன்; புனைதல் - அணியாகக் கொள்ளுதல். |
| எழுவார் - எழுவாராகி; எழுதல் - மேற்செல்லுதல். |
| பெருந் தொண்டர் - அன்பின் மிகுந்த திருத்தொண்டர்கள். |
| 1072 |
2971 | ஆய வேலையி லருமறைப் புகலியர் பிரானும் மேய வொற்றியூர் பணிபவர் வியனக ரகன்று காயல் சூழ்கரைக் கடன்மயி லாபுரி நோக்கித் தூய தொண்டர்தங் குழாத்தொடு மெதிர்வந்து தோன்ற, | |
| 1073 |
2972 | மாறில் வண்பெரு வணிகருந் தொண்டரு மலர்ந்த நீறு சேர்தவக் குழாத்தினை நீளிடைக் கண்டே "ஆறு சூடினார் திருமக னாரணைந் தா"ரென் றீறி லாததோர் மகிழ்ச்சியி னால்விழுந் திறைஞ்ச, | |
| 1074 |
2973 | காழி நாடருங் கதிர்மணிச் சிவிகைநின் றிழிந்து சூழி ரும்பெருந் தொண்டர்முன் றொழுதெழுந் தருளி வாழி மாதவர் வணிகர்செய் திறஞ்சொலக் கேட்டே ஆழி சூழ்மயி லாபுரித் திருநக ரணைந்தார். | |
| 1075 |
| 2971. (இ-ள்.) ஆய வேலையில் - அவ்வாறாகிய வேளையில்; அருமறை.....அகன்று - அரிய மறைகளின் தலைவராகிய பிள்ளையாரும் பொருந்தி யிருந்த திருவொற்றியூரினைப் பணிபவராய் அப் பெருநகரினை நீங்கி; காயல்....தோன்ற - உப்பளங்கள் சூழ்ந்த கரைக்கடலின் றுறையினையுடைய திருமயிலாபுரியைநோக்கித் தூய்மையுள்ள திருத்தொண்டர்களின் திருக் கூட்டத்தோடும் எதிரிலே வந்து தோன்ற, |
| 1073 |
| 2972. (இ-ள்.) மாறில்....தொண்டரும் - ஒப்பற்ற வண்மையுடைய பெருவணிகராகிய சிவநேசரும் அவருடன் வந்த பெருந் தொண்டர்களும்; மலர்ந்த......கண்டே - ஒளி விளங்கிய திருநீறு புனைந்து தவத்தையுடைய அடியார்களின் திருக்கூட்டத்தினை நெடுந்தூரத்திற் கண்டே; ஆறு.....என்று - கங்கையைச் சூடிய சிவபெருமானது திருமகனாராகிய பிள்ளையார் வந்தணைந்தனர் என்றே கொண்ட; ஈறிலாததோர்.....இறைஞ்ச - எல்லையில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சியினாலே நிலத்தில் விழுந்து வணங்க, |
| 1074 |
| 2973. (இ-ள்.) காழி நாடரும்.....இழிந்து சீகாழித் தலைவராகிய பிள்ளையாரும் ஒளி பொருந்திய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி; சூழ்.....எழுந்தருளி - சூழ்ந்த |